

இன்று (அக்டோபர் 22) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை அதிரடியாக ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாள் உயர்ந்தாலும், அடுத்த 2 நாட்களில் சரிந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 வரை குறைந்தது. இந்த விலை சரிவு மேலும் தொடர வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
சந்தையில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், விலை சரிவின் போது முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு, ரெப்போ வட்டி உயர்வு மற்றும் ஜியோ ஐபிஓ-வின் வருகையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளது. முதலீடுகள் குறைவது தங்கத்தின் விலையைக் குறைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 21) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.230-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 22) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,880-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.225-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,25,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்த சூழலில், இன்று மீண்டும் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது
நீண்ட நாட்களாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு ரூ.10,000 குறைந்தது. வெள்ளி மார்க்கெட்டைப் பொறுத்தவரை இது மிகப்பெரும் சரிவாகும். கடந்த ஆண்டின் இறுதியில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.400-ஐ கடந்து உச்சத்தை தொட்டது. தற்போதைய விலையைப் பார்த்தால், உச்சபட்ச விலையில் 50% அளவிற்கு சரிந்துள்ளது.
தொழில்துறையில் வெள்ளிக்கு தேவை இருந்தும் விலை சரிவது பிரம்மிப்பாக பார்க்கப்பட்டாலும், இந்த விலை சரிவு சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. தங்கத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து வருவதால், தங்கம் வாங்க நினைப்போருக்கு இது சரியான நேரமாக அமைந்துள்ளது.
மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருப்பதால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நோக்கி சரிய அதிக வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.