இனி மழைநீர் சேமிப்பு கட்டாயம்: தமிழக அரசின் புதிய விதிகள் இதோ!

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அரசு பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள், நடைமுறைகள்.
மழைநீர் சேமிப்பு
Rain Water Harvesting
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு மழைநீர் சேமிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வீடுகளில் மழைநீரை சேகரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக மழைநீர் சேமிப்பு என்பது வெறும் பேச்சாகவே இருந்து விட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், சரியான நேரத்தில் முதல்வர் இந்தத் திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்

நடப்பாண்டு எல்-நினோ விளைவால், அதீத வெப்பம் வீசியது. நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்த நிலையில், பருவமழை மட்டும் குறைந்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவது உறுதி என எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஏரிகளும், குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ள நிலையில், பருவமழை நீரை சேமிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று (அக்டோபர் 21) மெரினா கடற்கரையில் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் நடைபெற்ற மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இலச்சினையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மழை நீர் சேகரிப்பு திட்ட செயலாக்கம் குறித்து முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். துளி இலச்சினையில் மழைநீர் சேமிப்பு முக்கியம் மக்களே என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu
மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu
இதையும் படியுங்கள்:
மழைநீர் சேமிப்பு தெரியும்; மழைநீர் அறுவடை தெரியுமா?
மழைநீர் சேமிப்பு

மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “தமிழ்நாட்டின் பல இடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் தூர்ந்து போயும், சேதமடைந்தும் உள்ளன. 2022 இல் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்த, புதிய கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுகளை அதிகப்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பருவமழைக்கு முன்னதாக 100% மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பழைய வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இனி மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.

பழைய, புதிய கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரூ.10,000 சரிவு.! தங்கம் மட்டுமில்ல வெள்ளியும் குறைஞ்சிருக்கு.! செம லக் தான் இன்னிக்கு.!
மழைநீர் சேமிப்பு

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம்:

* மழைநீரை வீணடிக்காமல் சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

* கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

,* நிலத்தின் ஈரப்பதம் நீண்ட நாட்கள் தக்க வைக்கப்படும் என்பதால், மண் அரிப்பு தடுக்கப்படும்.

* மழைநீரை அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நீர் விரயமாவதைத் தடுக்கலாம்.

* நீரின் தரம் மேம்படுவதால், சுத்தமான குடிநீர் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com