மழைக்கு இதமான செய்தி: 4 நாட்களில் ரூ.4,080 குறைந்த தங்கம் விலை.! நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 23) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாள் ரூ.280 உயர்ந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ரூ.640, ரூ.800 மற்றும் ரூ.1,240 என தொடர்ந்து சரிந்தது தங்கம் விலை. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,680 வரை சரிந்துள்ளது.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்த தங்கம், ஒருசில நாட்களில் ஏறினாலும் இதுவரை ரூ.5,000-க்கும் மேல் சரிந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவது, அதன் மீதான முதலீடுகள் குறைவதைக் காட்டுகிறது. தங்கத்தின் மீது ஏற்கனவே செய்த முதலீடுகளும் விடுவிக்கப்பட்டால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 22) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.225-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 23) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,400 குறைந்து, ரூ.1,04,480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.225-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,25,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த சூழலில், இன்று மீண்டும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.

Gold Price
Gold Price
இதையும் படியுங்கள்:
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளில் கிடைக்கும் தெரியுமா.?
தங்கம் விலை

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மட்டும் தான் சரிந்து வந்தது. ஆனால் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. ஆனால் கடந்த 2 நாட்ளில் மட்டும் தங்கத்தோடு சேர்ந்து, வெள்ளி விலையும் சரிந்தது.

ஒரு கிராமுக்கு ரூ.15 வரை குறைந்த வெள்ளி, வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டின் சரிவும் நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த வருட முடிவில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.600 வரை உயரும் எனக் கூறப்பட்டது. இதனை நம்பி பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர். ஆனால் தற்போது வெள்ளி விலை 50%-க்கும் மேல் சரிந்துள்ளது. இந்த சரிவு தொடரும் பட்சத்தில், வெள்ளியில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள். ஆனால் இந்த விலை சரிவு இல்லத்தரசிகளுக்கு டபுள் ஜாக்பாட்டாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பொங்கல் முதல் தீபாவளி வரை: 2027 அரசு விடுமுறை நாட்கள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com