பொங்கல் முதல் தீபாவளி வரை: 2027 அரசு விடுமுறை நாட்கள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு.!

முக்கிய விழாக்கள், வழிபாட்டு தினங்கள் மற்றும் குடும்பக் கொண்டாட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள்
2027 அரசு விடுமுறை நாட்கள்
Government Holidays
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

2027 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை இன்று (அக்டோபர் 22) வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றன.

ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை விடுமுறை, மார்ச் 10-ல் ரம்ஜான், அக்டோபர் 28-ல் தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25-ல் கிறிஸ்துமஸ் என 2027-ம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

பொதுவாக புதிய வருடம் பிறக்கும் போது காலண்டரில் பலரும் விடுமுறை தினங்களைத் தான் முதலில் பார்ப்பார்கள். விடுமுறை தினங்களை பார்ப்பது கூட ஒருவிதமான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வகையில் தமிழக அரசு 2027 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களை வெளியிட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விடுமுறைப் பட்டியல் 2027:

1. ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 - வெள்ளிக்கிழமை

2. பொங்கல் - 15.01.2027 - வெள்ளிக்கிழமை

3. திருவள்ளுவர் நாள் - 16.01.2027 - சனிக்கிழமை

4. உழவர் திருநாள் - 17.01.2027 - ஞாயிற்றுக்கிழமை

5. தைப்பூசம் - 22.01.2027 - வெள்ளிக்கிழமை

6. குடியரசு நாள் - 26.01.2027 - செவ்வாய்க்கிழமை

7. ரம்ஜான் - 10.03.2027 - புதன்கிழமை

8. புனித வெள்ளி - 26.03.2027 - வெள்ளிக்கிழமை

9. வங்கிக் கணக்கு முடிவு நாள் - 01.04.2027 - வியாழக்கிழமை

10. தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 - புதன்கிழமை

11. தமிழ்ப் புத்தாண்டு 14.04.2027 - புதன்கிழமை

12. மகாவீர் ஜெயந்தி - 19.04.2027 - திங்கட்கிழமை

13. மே நாள் - 01.05.2027 - சனிக்கிழமை

14. பக்ரீத் (Idul Zuha) - 17.05.2027 - திங்கட்கிழமை

15. மொஹரம் - 15.06.2027 - செவ்வாய்க்கிழமை

16. சுதந்திர நாள் - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை

17. மிலாதுன் நபி - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை

18. கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 - புதன்கிழமை

19. விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 - சனிக்கிழமை

20. காந்தி ஜெயந்தி - 02.10.2027 - சனிக்கிழமை

21. ஆயுத பூஜை - 08.10.2027 - வெள்ளிக்கிழமை

22. விஜயதசமி - 09.10.2027 - சனிக்கிழமை

23. தீபாவளி - 28.10.2027 - வியாழக்கிழமை

24. கிறிஸ்துமஸ் - 25.12.2027 - சனிக்கிழமை

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் சர்ப்ரைஸ் பரிசு: இலவச கல்வி உபகரணங்கள் பெறுவது எப்படி?
2027 அரசு விடுமுறை நாட்கள்

முன்கூட்டியே அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிடுவதன் மூலம், பண்டிகை கால பயண முன்பதிவுகள், வழிபாட்டு ஏற்பாடுகள் மற்றும் குடும்ப விழாக்களை திட்டமிட்டு செய்ய உதவியாக இருக்கும்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் 8 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் வருவதால், ஊழியர்கள் குறைந்தபட்ச விடுப்புகளை பயன்படுத்தி தொடர் விடுமுறை எடுக்கலாம். இந்த நாட்களை சுற்றுலா மற்றும் ஓய்வுக்காக திட்டமிடலாம்.

இதையும் படியுங்கள்:
அடிமட்டத்திற்கு சரிந்த தங்கம் விலை! சேமிக்க நினைப்பவர்களுக்கு இது தான் ‘கோல்டன் சான்ஸ்’.!
2027 அரசு விடுமுறை நாட்கள்
logo
Kalki Online
kalkionline.com