

இன்று (அக்டோபர் 24) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,080 வரை சரிந்தது. அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்க முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் சரிந்து வருவது நடுத்தர மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 23) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.225-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 24) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் 4 நாட்கள் வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.220-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,20,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக சரிந்த சூழலில், இன்று விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வெள்ளி விலை சரிந்தது சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், வரும் நாட்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்தத் தேர்தல் முடியும் வரை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிய வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இந்த சரிவு தற்காலிகமானது தான். முதலீட்டாளர்கள் மத்தியில் டாலருக்கு எதிரான மனநிலை ஏற்பட்டால், அவர்களின் முழு கவனமும் தங்கத்தின் மீது திரும்பி விடும். அப்படி நடந்தால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது.
தங்கம் விலை குறையும் போது, இன்னும் குறையட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலை தான் பலருக்கும் உள்ளது. ஆனால் விலை சரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான். அதனை சரியாக கணிக்க முடியாது. ஆகையால் தங்கம் வாங்க நினைப்பவர்கள், இப்போதே வாங்கி விடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.