2 கேஸ் இணைப்பு இருந்தால் இலவச சிலிண்டர் கிடைக்குமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

மானியப் பணம் வங்கிக்கு எப்போது வரும்? ரேஷன் அட்டைதாரர்களின் குழப்பங்களுக்கு உடனடித் தீர்வு.
இலவச சிலிண்டர்
Free Cylinder
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையின் போது முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் முதல்வர் விஜய். இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.

இத்திட்டம் வருகின்ற பொங்கலுக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரித்து வருகிறது. அன்னபுரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் அறிவிப்பு வெளியான போதிலும், இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பொங்கலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள சூழலில், சொன்னபடி பொங்கலுக்கு இத்திட்டம் அமலுக்கு வருமா, தகுதிகள் என்னென்ன உள்ளிட்ட 6 சந்தேகங்கள் மக்களுக்கு எழுந்துள்ளன.

1. அன்னபூரணி சூப்பர்சிக்ஸ் திட்டம் எப்போது தொடங்கும்?

வருகின்ற 2027 பொங்கல் பண்டிகைக்கு அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். ஆகையால் இந்தத் திட்டத்தில் கால தாமதம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி, கிறிஸ்மஸ் மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால், இத்திட்டம் தொடங்கப்பட்டால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும்.

2. திட்டத்திற்கான தகுதிகள் என்னென்ன?

* மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

* தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் குடும்ப அட்டை கட்டாயமாகும்.

* கேஸ் சிலிண்டர் இணைப்பு குடும்பத் தலைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செயலில் இருக்க வேண்டியது அவசியம்.

free cylinders, CM Vijay
free cylinders, CM Vijay
இதையும் படியுங்கள்:
ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளில் கிடைக்கும் தெரியுமா.?
இலவச சிலிண்டர்

3. வருமானச் சான்று கட்டாயமா?

வருமானச் சான்று கட்டாயம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் வருவாய்த் துறை தரவுகள் மூலம் கேஸ் இணைப்பு பயனாளிகள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றனர்.

ரேஷன் கார்டில் குடும்ப ஆண்டு வருமான வரம்பு புதுப்பிக்கப்படாமல் இருந்தால் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

4. முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டுமா?

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் பயன்பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் கேஸ் இணைப்பு உள்ளிட்ட விவரங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கேஸ் இணைப்பு உள்ளவர்கள் ஆதாரை இணைக்கும் e-KYC முறையை முடித்திருக்க வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
மழைக்கு இதமான செய்தி: 4 நாட்களில் ரூ.4,080 குறைந்த தங்கம் விலை.! நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்.!
இலவச சிலிண்டர்

5. குடும்பத்தில் 2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் இருந்தால் இத்திட்டத்தில் பயன்பெற முடியுமா?

ஒரு ரேஷன் கார்டில் உள்ள கேஸ் இணைப்புக்கு மட்டுமே ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்களுக்கான பலன் கிடைக்கும். ஒரே ரேஷன் கார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால், முதன்மையான கேஸ் இணைப்புக்கு மட்டுமே 3 சிலிண்டருக்கான மானியம் வரவு வைக்கப்படும்.

6. இலவச சிலிண்டர்கள் நேரடியாகக் கிடைக்குமா அல்லது பணம் வங்கிக் கணக்கில் வருமா?

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மானியம் வழங்கும் முறைப்படி செயல்பட உள்ளது. எப்போதும் போலவே முன்பதிவு செய்து, முழுத் தொகையையும் செலுத்தி கேஸ் சிலிண்டரைப் பெற்றுக் கொள்ளலாம். விநியோகம் உறுதி செய்யப்பட்டதும், சிலிண்டருக்கான முழுத் தொகையும் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com