​இறங்குவது போல் பாவ்லா காட்டி.. இன்று உச்சம் தொட்ட தங்கம்! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 26) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.220-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் ரூ.280 உயர்ந்தது. ஆனால் அதற்குப் பின் அடுத்தடுத்து வீழ்ச்சியை சந்தித்த தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.4,080 வரை சரிந்தது. மேலும் சரியும் என எதிர்பார்த்த நிலையில் வாரத்தின் கடைசி நாளில் ரூ.80 உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த வாரத்தில் ஒரு சவரனுக்கு ரூ.3,720 குறைந்தது. கடந்த வாரம் போலவே இந்த வாரமும் விலை சரிந்தால், அது நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

தங்கம் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்ததில் இருந்து, சாமானிய மக்களுக்கு தங்கம் வாங்கும் ஆசையே போய் விட்டது. ஆசைக்காக வாங்குவதைக் காட்டிலும், சீர் செய்யவே இப்போது தங்கத்தை வாங்குகின்றனர். இந்நிலையில் தங்கம் விலை குறைவது ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி. இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 24) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,070-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 26) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை
Gold price
இதையும் படியுங்கள்:
இனி டிரைவிங் லைசென்ஸில் மொபைல் எண் கட்டாயம்: அடுத்தடுத்து வரப் போகும் அதிரடி மாற்றங்கள்!
தங்கம் விலை

தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்த ஜியோ ஐபிஓ தொடங்கப்பட்டது. இதில் சிறு, குறு மற்றும் பெரு முதலீட்டாளர்கள் 30,000 கோடி ரூபாமாக்கும் மேல் முதலீடு செய்தனர். இதனால் ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை குறைவுக்கு மறைமுக காரணாக பார்க்கப்படுகிறது. உலகளாவிய சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர போர் பதற்றச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள முரண்பாடு ஆகியவையும் தங்கத்தின் விலையை பாதிக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்:
பிஎச்.டி முதல் கின்னஸ் வரை... சமையல் உலகில் சரித்திரம் படைத்த செஃப் தாமு காலமானார்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்
logo
Kalki Online
kalkionline.com