இனி டிரைவிங் லைசென்ஸில் மொபைல் எண் கட்டாயம்: அடுத்தடுத்து வரப் போகும் அதிரடி மாற்றங்கள்!

இனி மொபைல் எண் கட்டாயம்; இலவச சேவைகள் மற்றும் புதிய விதிகளின் முழு விவரம்.
ஓட்டுநர் உரிமம்
Driving License
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. விபத்து காலங்களில் காப்பீட்டை கிளைம் செய்வதற்கு ஓட்டுநர் உரிமம் செயலில் இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்படியாக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதன்படி இனி டிரைவிங் லைசன்ஸில் மொபைல் எண்ணும் அச்சிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய மாற்றங்கள்:

இலவச சேவைகள்:

ஆதார் கார்டு சரிபார்ப்பின் மூலம் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் தொலைபேசி எண்ணைப் புதுப்பித்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்து, இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது

தேர்ச்சி மதிப்பெண் உயர்வு:

புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் 60% மதிப்பெண்களை எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 75% ஆக உயர்த்தப்படவுள்ளது.

ஆவண விதிகளில் மாற்றம்:

முகவரி சான்றாகப் ஏற்கப்பட்டு வந்த நோட்டரி அஃபிடவிட் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் இனி ஏற்கப்படாது. அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களான ஆதார் கார்டு, பிறப்புச் சான்று, எல்பிஜி கேஸ் பில், மின்சார பில், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அட்டை மட்டுமே இனி முகவரிச் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.

சாலைப் பாதுகாப்புப் பயிற்சி:

பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தொடர்பான 30 நிமிட பயிற்சியை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முடிக்க வேண்டும்.

Driving license
Driving license
இதையும் படியுங்கள்:
இனி ஸ்கூலுக்கு கெத்தா போலாம்! அதிரடியாக களமிறங்கும் நவீன ஹீரோ சைக்கிள்கள்!
ஓட்டுநர் உரிமம்

காலக்கெடு நிர்ணயம்:

ஓட்டுநர் உரிமத்தில் பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் 15 நாட்களுக்குள் பரசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை முகவரி மாற்ற விண்ணப்பமானது 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படவில்லை எனில், அது தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.

வாகன வகை நீக்கம்:

ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் குறிப்பிட்ட வாகனப் பிரிவை நீக்கக் கோரினால், அடுத்த 7 நாட்களுக்குள்ளாகவே பரிசீலிக்கப்படும். நீக்கப்பட்ட இந்த வாகனப் பிரிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுமெனில், ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.

தனித்தனி வண்ணக் குறியீடுகள்:

இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்திற்கு இடையே வித்தியாசத்தைக் காட்டும் வகையில் தனித்தனி வண்ணங்களில் லைசன்ஸ் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ஓட்டுநர் உரிமம் இருக்கா.? இனி 50 வயது வரை அலைய தேவையில்லை!
ஓட்டுநர் உரிமம்

மொபைல் எண் சேர்ப்பு:

ஓட்டுநர் உரிமத்தில் மொபைல் எண், இரத்த வகை மற்றும் அவசரத் தொடர்பு எண் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த விதிகள் வரைவு அறிக்கையாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து ஆட்சேபனை ஏதும் இருந்தால் பொதுமக்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அதற்குப் பிறகே இறுதியான விதிமுறைப் பட்டியல் வெளியாகும்.

மத்திய அரசின் புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com