கல்யாண சீசனில் அடுத்தடுத்து ஷாக்: நேற்றும் உயர்ந்து இன்றும் உயர்ந்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 27) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.220-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் உயர்ந்து, பின் சரிந்தது. அதேபோல் இந்த வாரத்திலும் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,150 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. இதன் தாக்கம் தான் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை 3,250 டாலராக சரிய வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் நடந்தால் இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.98,000-க்கு வர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே குறையும் என்ற நடுத்தர மக்களின் நம்பிக்கை, இப்போது மெல்ல மெல்ல துளிர் விட்டுள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 26) தங்கம் 1 கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 27) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த சூழலில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்துள்ளது.

gold price
gold price AI Image
இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிக்கும் முன் இதை பண்ணுங்க! வெறும் 11 ரூபாயில் 25,000 ரூபாய் காப்பீடு..!
தங்கம் விலை

டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்களின் பார்வை மீண்டும் டாலரின் மீது திரும்பியுள்ளது. அமெரிக்க வட்டி உயர்வும் இதற்கு ஒரு முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் தங்க முதலீடு குறைந்திருப்பது, நடுத்தர வர்க்கத்தினருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஏறத் தொடங்கிய தங்கத்தின் விலை, நடப்பாண்டு தொடக்கம் வரை மட்டுமே நீடித்தது. அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம், தற்போது வரை உச்சபட்ச விலையில் இருந்து 25% வரை குறைந்துள்ளது. இந்த சரிவால் தான் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என்ற நம்பிக்கை பலருக்கும் பிறந்துள்ளது.

இன்னும் 5,000 ரூபாய் குறைந்து விட்டால் தங்கம் விலை 4 இலக்க எண்களுக்குள் வந்து விடும். அப்படியே விலை குறைந்தாலும் கூட, மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com