நகை வாங்குற ஆசையே போயிடும் போல! 3 நாட்களில் ரூ.1,000 உயர்ந்த தங்கம் விலை.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 28) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.220-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் அதிரடியாக சரிந்த நிலையில், மேலும் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வார இறுதியில் உயரத் தொடங்கிய தங்கம் விலை சவரனுக்கு ரூ.80, ரூ.120 மற்றும் ரூ.400 என கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இது சிறிய அளவிலான விலையேற்றமே என்றாலும், தொடர்ச்சியாக உயர்வது தான் அதிர்ச்சியை அளிக்கிறது.

தங்கம் விலை குறையும் என்ற கணிப்புகள் ஒருபுறம் வந்தாலும், உயரும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் தற்போதைக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் விலையேற்றத்தை சந்திக்காமல் இருப்பது தான்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 27) தங்கம் 1 கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 28) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து, ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த சூழலில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold Price
Gold
இதையும் படியுங்கள்:
பென்ஷன் வாங்குவோர் கவனத்திற்கு: வாழ்நாள் சான்றிதழை வீட்டிலிருந்தே சமர்ப்பிக்க 3 வழிகள்.!
தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த வீழ்ச்சி பெருமளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்க முதலீடுகள் குறைந்தாலும், சீனாவில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதவிர சீனா அரசும் நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தை அதிகளவில் வாங்கிக் குவித்துள்ளது.

பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தங்கம் துருப்புச்சீட்டாக இருக்கும் என சீனா கருதுகிறது. சீனா மட்டுமல்ல இந்தியன் ரிசர்வ் வங்கியும் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தை அதிகளவில் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்க முதலீடுகள் குறைந்தாலும், தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்க இறக்குமதி அதிகாரிப்பாலும், வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயர அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே கொசுவால் 3 கொடிய நோய்கள்! பருவமழையில் இருந்து தப்ப மக்கள் செய்ய வேண்டியது என்ன?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com