பென்ஷன் வாங்குவோர் கவனத்திற்கு: வாழ்நாள் சான்றிதழை வீட்டிலிருந்தே சமர்ப்பிக்க 3 வழிகள்.!

ஆன்லைனில் பென்ஷன் வாழ்நாள் சான்றிதழ் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்
Postman provides digital life certificate to elder.
Life Certificate
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

பென்ஷன் வாங்குவோர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் தான் வாழ்நாள் சான்றிதழ். பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 1 முதல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அடுத்த ஆண்டுக்கான பென்ஷன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது.

நடப்பாண்டில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்னும் 3 நாட்களே மீதமுள்ளன. ஆகையால் பென்ஷன் வாங்குவோர் விரைந்து வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ள நிலையில், வீட்டில் இருந்தே 3 வழிகளில் மூத்த குடிமக்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

1. ஸ்மார்ட்போன் மூலம் முக அங்கீகாரம்:

* ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட்போன் இருந்தால் எவ்வித கட்டணமும் இன்றி, நீங்களே ஆன்லைனில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

* கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Aadhaar Face RD மற்றும் Jeevan Pramaan ஆகிய 2 செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* ஜீவன் பிரமான் செயலியில் Operator Authentication என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஆதார் எண்ணை உள்ளிட்டு ஓடிபி மூலம் உள்நுழையவும்.

* செயலியில் கேமரா அனுமதியை வழங்கி விட்டு, திரையில் தெரியும் வழிகாட்டுதலைப் பின்பற்றி முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.

* அடுத்ததாக ஓய்வூதிய ஆணை எண் (PPO), ஓய்வூதிய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

* முடிவில் மொபைல் கேமிரா முன்பு நேராக நின்று கண் சிமிட்டினால், உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும்.

* இந்தப் பதிவை முடித்த பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு Pramaan ID அடங்கிய ஒரு குறுந்தகவல் வரும். இதில் உள்ள லிங்கை கிளிக் செய்து வாழ்நாள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Life certificate
Life certificate
இதையும் படியுங்கள்:
குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!அதிரடியாக குறையப் போகும் அரிசி விலை.! எவ்வளவு தெரியுமா.?
Postman provides digital life certificate to elder.

2. அஞ்சல் துறை உதவியுடன் வீட்டிருந்தே சமர்ப்பிக்கலாம் (IPPB Doorstep Service):

* ஸ்மார்ட்போனில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், அஞ்சல் துறை மூலம் வீட்டிலேயே வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

* Post Info செயலியை பதிவிறக்கம் செய்து மொபைல் எண், ஆதார் மூலம் உள்நுழைய வேண்டும்.

* செயலியில் உள்ள Doorstep Service என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும். ccc.cept.gov.in/serviceRequest என்ற இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

* முன்பதிவு செய்த அடுத்த சில நாட்களுக்குள் தபால் அலுவலர் அல்லது கிராம அஞ்சல் ஊழியர் உங்கள் வீட்டிற்கு வருவார்.

* கைரேகை மற்றும் பயோமெட்ரிக் கருவியின் உதவியுடன் வாழ்நாள் சான்றிதழை அஞ்சல் துறை ஊழியர்கள் சமர்ப்பிப்பார்கள்.

* இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒரே கொசுவால் 3 கொடிய நோய்கள்! பருவமழையில் இருந்து தப்ப மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Postman provides digital life certificate to elder.

3. வங்கிகள் உதவியுடன் வீட்டிருந்தே சமர்ப்பிக்கலாம் (Doorstep Banking Service):

* நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் பென்ஷன் பணம் பெறும் மூத்த குடிமக்கள், வங்கிகளின் கூட்டு டோர்ஸ்டெப் சேவையின் மூலம் வங்கியின் பிரதிநிதியை வீட்டிற்கே வரவழைக்கலாம்.

* Doorstep Banking (DSB) செயலியைப் பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முன்பதிவு செய்யலாம்.

* 1800 121 3721 மற்றும் 1800 103 7188 ஆகிய கட்டணமில்லா தொடர்பு எண்களை அழைத்தும் முன்பதிவு செய்யலாம்.

* வங்கி ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து பயோமெட்ரிக் முறையில், வாழ்நாள் சான்றிதழைப் பதிவு செய்து தருவார்.

* ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப இதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com