ஒரே கொசுவால் 3 கொடிய நோய்கள்! பருவமழையில் இருந்து தப்ப மக்கள் செய்ய வேண்டியது என்ன?

ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுத்து எலிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து மீள்வதற்கான அவசர நடவடிக்கைகள்.
டெங்கு காய்ச்சல்
Dengue Fever
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் வறண்டு கிடந்த நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழையின் போது சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமானது தான். ஆனால் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்தச் சூழலில், பருவமழைக் காலத்தில் பொதுமக்கள் விழிப்புன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில் பருவமழையின் போது டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு சென்னை சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கியமாக நமது வசிப்பிடத்தில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதை செய்தாலே கொசுக்களின் உற்பத்தி கிட்டத்தட்ட பாதி குறைந்து விடும்.

சென்னை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை:

* வெள்ளப்பெருக்கு, வீட்டைச் சுற்றி தேங்கும் மழைநீர், சுகாதாரமற்ற சூழலால் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

* தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து, மூடி வைக்க வேண்டும்.

* பயன்பாடில்லாத டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் பூந்தொட்டிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஒருவேளை தண்ணீர் தேங்கினால் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

* பாதுகாப்பான காலணிகள் இன்றி மழைநீரில் நடக்க வேண்டாம்.

* தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

* உடலில் உள்ள காயங்களை மூடி மறைப்பது நல்லது. குறிப்பாக முழுக்கை உள்ள ஆடைகளை அணியலாம்.

* காய்ச்சல் வந்தால் சுயமாக மாத்திரை உட்கொள்ளாமல், மருத்துவரை அணுக வேண்டும்.

* ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகலாம்.

* சென்னை மாநகராட்சி உதவி எண் 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் உதவி கோரலாம்.

ஒரே கொசு - 3 வகையான நோய்த்தொற்றுகள்:

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரில் தான் ஏடிஸ் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. இதன் பெருக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் நோய்த்தொற்று பாதிப்பும் அதிகரிக்கும். ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு என 3 விதமான நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. ஒரே கொசுவால் 3 விதமான நோய்த்தொற்றுகள் உண்டாகும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

Dengue
Dengue
இதையும் படியுங்கள்:
பட்டாசு வெடிக்கும் முன் இதை பண்ணுங்க! வெறும் 11 ரூபாயில் 25,000 ரூபாய் காப்பீடு..!
டெங்கு காய்ச்சல்

அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சல்:

* இரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை குறையும்.

* கடுமையான உடல்வலி மற்றும் கண்களுக்கப் பின்புறம் வலி ஏற்படும்.

சிக்கன் குனியா:

* மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏறபடலாம். இந்த வலி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

ஜிகா வைரஸ் தொற்று:

* மூட்டு வலி, கண்கள் சிவத்தல் மற்றும் தோல் அரிப்பு ஏற்படும்.

* கர்ப்பிணிகளுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இரத்தப் பரிசோதனை: வெறும் அறிகுறிகளை வைத்து மட்டும் நோய்த்தொற்றை நம்மால் தீர்மானிக்க முடியாது. காய்ச்சல் மற்றும் உடல்வலி அதிகமானால் காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவமனைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒருவேளை நோய்த்தொற்று இருப்பது உறுதியானால் மருத்துவர் வழிகாட்டுதலின் படி உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் சிக்கன் குனியா பரவல்.! பொது சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை.!
டெங்கு காய்ச்சல்
logo
Kalki Online
kalkionline.com