

இன்று (அக்டோபர் 29) 22 காரட் ஆபரணத் தங்கம் மாற்றமின்றி ரூ.1,05,560-க்கு நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.215-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது. திங்கட்கிழமை ரூ.120, செவ்வாய்க்கிழமை ரூ.400 மற்றும் நேற்று புதன்கிழமை ரூ.480 என இந்த உயர்வு மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை சரிந்ததால், மகிழ்ச்சியடைந்த நடுத்தர வர்க்கத்தினர், இந்த வார விலை உயர்வைக் கண்டு கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது மீண்டும் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிராபார்ப்பு நிலவி வருகிறது.
பல மாதங்களாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு நல்ல செய்தி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி விட்டது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில், அடுத்தடுத்த நாட்களில் விலை நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதே கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 28) தங்கம் 1 கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 29) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,195-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.215-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,15,000-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை நேரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கப் போகிறது என்ற கணிப்புகள் இப்போதே வரத் தொடங்கி விட்டன. ஒருதரப்பினர் தங்கம் விலை உயரும் எனவும், மறுதரப்பினர் குறையும் எனவும் கூறி வருகின்றனர். இதில் யாருடைய கணிப்புகள் மெய்யாகும் அல்லது பொய்யாகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடப்பாண்டு இறுதியில் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என்ற கணிப்பு ஏற்கனவே வெளியானது. இது நடந்தால் முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபம் கிடைக்கும். அதோடு தங்க முதலீடுகள் மேலும் அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை மேலும் உயருமே தவிர குறையாது.
ஆனால் இந்தக் கணிப்பு மட்டும் பொய்யானால், 10 கிராம் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிவது மட்டும் உறுதி. அப்படி சரிந்தால், இந்திய சந்தையில் தங்கம் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.