ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போட முடியாது..!!

மின் விபத்துகளைத் தடுக்க ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் இரவு நேர சார்ஜிங் பாயிண்ட் துண்டிப்பு.
சார்ஜ் பாயிண்ட்
Chathe point
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். ரயிலில் பயணிகள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் பயணிக்க ரயில்வே துறை பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது புதிய விதிகளை அமல்படுத்தியும், பழைய விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டும் வருகிறது ரயில்வே துறை.

இந்நிலையில் அனைத்து வகையான ரயில் பெட்டிகளிலும் மொபைல்போனுக்கு சார்ஜ் செய்யும் நேரத்தில் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது ரயில்வே துறை. புதிய விதியின் படி, இரவு 11 மணிக்கு மேல் ரயிலில் மொபைல்போனுக்கு சார்ஜ் போட முடியாது.

இதற்கு முன்னர் ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜ் பாயிண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்யும் வசதி இருந்தது. ஆனால் இப்போது மின் விபத்துகளைத் தவிர்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாரஜ் பாயிண்டுகளுக்கான நேரக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரயில் முன்பதிவுப் பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், நள்ளிரவில் பவர் பேங்குக்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டார். இரவு முழுவதும் சார்ஜ் ஏறியதால், எதிர்பாரா விதமாக பவர் பேங்க் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த விபத்தை அப்படியே விட்டு விடாமல் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது ரயில்வே துறை. இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பு விதிகளின் படி, ரயில்களில் உள்ள அனைத்துப் பெட்டிகளிலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனால் நள்ளிரவில் பயணிகள் யாரும் மொபைல்போன், லேப்டாப் மற்றும் பவர் பேங்குக்கு சார்ஜ் செய்ய முடியாது.

பயணிகள் தூங்கும் நேரத்தில் மின் கசிவு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த விதிமுறை உதவும். மேலும் மொபைல் பேட்டரி அதிகமாக வெப்பமாவது அல்லது வெடிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

ரயில்வே விதி
Train
இதையும் படியுங்கள்:
நகை வாங்குற ஆசையே போயிடும் போல! 3 நாட்களில் ரூ.1,000 உயர்ந்த தங்கம் விலை.!
சார்ஜ் பாயிண்ட்

முக்கிய விவரங்கள்:

* மின் இணைப்பு துண்டிக்கப்படும் நேரம்:

இரவு 11 முதல் காலை 5 மணி வரை.

* மீண்டும் மின் இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் நேரம்:

காலை 5 மணிக்கு மேல்.

* பொருந்தும் ரயில்கள்:

ஸ்லீப்பர் கோச் மற்றும் ஏசி உள்ளிட்ட அனைத்து முன்பதிவு ரயில் பெட்டிகளுக்கும் இந்த புதிய விதி பொருந்தும்.

பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ரயிலில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், இனி இரவு 11 மணிக்கு முன்பாகவே மொபைல்போன், லேப்டாப் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்ட மின் சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்வது நல்லது.

ரயில் பயணத்தின் போது சார்ஜிங் பாயிண்டுகளில் எலக்ட்ரிக் கெட்டில் மற்றும் ஹீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இஇந்த சாதனங்கள் மின் இணைப்பில் கடுமையான கோளாறை ஏற்படுத்தும். தற்போது மொபைல் சார்ஜிங் நேரத்திலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருப்பது, பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் வேணுமா? டிக்கெட் புக் செய்யும்போது இந்த 5 ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
சார்ஜ் பாயிண்ட்
logo
Kalki Online
kalkionline.com