இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.800 குறைந்தது..!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை நிலவரம்
Gold And Silver
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 03) ஒரு சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

உலகளாவிய போர் பதற்றம், சர்வதேச சந்தை நிலை மற்றும் பொருளாதார மாற்றங்களினால் தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் விரைவில் முடிவடையும் என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

இந்தப் போர் முடிவுக்கு வந்து விட்டால் தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே உள்ளது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 2) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கும், ஒரு சவரன் ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 3) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,09,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாஸ் காட்டிய முதல்வர்.! "காலையில் கண்டக்டர்... மாலையில் டிரைவர்.." டிராக்டர் ஓட்டிய வீடியோ வைரல்.!
தங்கம் விலை நிலவரம்
gold price
gold price

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,13,080-க்கு விற்பனையானது.

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,920-க்கு விற்பனையானது. 10 நாட்களுக்கு முந்தைய விலைக்கும், 1 மாதத்திற்கு முந்தைய விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு அக்டோபர் 3-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.86,720-க்கு விற்பனையானது. ஒரு வருட இடைவெளியில் தங்கத்தின் விலை சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு நடப்பாண்டு தொடக்கத்துடன் முடிந்து விட்டது. அதற்குப் பின் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமே இல்லை. ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அம்பும் தப்பல, தங்கமும் தப்பல.! இந்தியாவுக்கு 17-வது தங்கம் பெற்றுத் தந்த 17 வயது சிங்கப்பெண்.!
தங்கம் விலை நிலவரம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com