மாஸ் காட்டிய முதல்வர்.! "காலையில் கண்டக்டர்... மாலையில் டிரைவர்.." டிராக்டர் ஓட்டிய வீடியோ வைரல்.!

மாஸ் காட்டிய முதல்வர்! டிராக்டர் ஓட்டிய வைரல் காட்சி! 🔥
இடைத்தேர்தல் ரோடு ஷோ
CM Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இந்நிலையில் ஆளும் கட்சியான தவெக தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தலா ஒரு முறை பரப்புரையை மேற்கொண்டார் முதலமைச்சர்.

இந்நிலையில் இன்று மதியம் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மாமண்டூரில் தொடங்கி கிட்டத்தட்ட 39 கிராமங்களில் ரோடு ஷோ நடத்தி வருகிறார் முதல்வர் விஜய். இதன்மூலம் மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
இது என்ன புது ட்விஸ்ட்? தங்கம் சவரனுக்கு ₹760... வெள்ளி ₹5,000 உயர்வு.!
இடைத்தேர்தல் ரோடு ஷோ

முதல்வர் விஜய்யின் ரோடு ஷோவில் வழி நெடுக பொதுமக்கள் ஆதரவு தந்து வருகின்றனர். ரோடு ஷோவின் போது மாற்றுத்திறனாளிகளை கண்ட முதல்வர் விஜய், வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களிடம் நேரடியாக வந்து பேசி வாக்கு சேகரித்தார். அதன் பின்னர் ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தி, காபி குடித்து விடுத்து நன்றாக இருக்கிறது என்று சொல்லி சொல்லி விட்டுச் சென்றார் முதல்வர் விஜய்.

இதனையடுத்து ஒரு கிராமத்தின் வயலில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முதல்வர். முதல்வர் டிராக்டர் ஓட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காலை பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்யும் வெற்றி மகளிர் பயணத் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்.

இத்திட்டத்தை தொடக்கி வைத்தது மட்டுமின்றி, தன் கையால் பெண்களுக்கு இலவச டிக்கெட்டை வழங்கி நடத்துநராகவும் சிறிது நேரம் பணிபுரிந்தார். முதல்வர் கையால் இலவச டிக்கெட்டைப் பெற்ற பெண்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

காலையில் வெற்றி மகளிர் பயணத் திட்டத்தை தொடக்கி வைக்கும் போது கண்டக்டராக இருந்த முதல்வர் விஜய், மாலையில் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளரை ஆதரித்து டிரைவராகவும் வாக்கு சேகரித்தார். காலையில் கண்டக்டர், மாலையில் டிரைவர் என அசத்தும் முதல்வர் விஜய்யை நேரில் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் இரட்டை வெற்றி: அரசியலில் அப்பா... சினிமாவில் மகன்.!
இடைத்தேர்தல் ரோடு ஷோ

வயல்வெளியில் இருந்த பெண்களைக் கண்ட முதல்வர் விஜய், அவர்களிடம் சென்று பேசியதோடு, விசிலுக்கு வாக்களியுங்கள் என்று ஓட்டு கேட்டார். முதல்வரை நேரில் பார்த்த பெண்கள் தெய்வத்தை பார்ப்பது போல் இருக்கிறது என பூரித்தனர்.

எலப்பாக்கம் பகுதியில் ரோடு ஷோவின் போது தவெக துண்டுடன் இருந்த குழந்தையை முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து கொஞ்சினார். முதல்வரை ஒருமுறைப் பார்த்ததுமே அதிக ஊக்கம் கிடைத்து விட்டதாக அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com