நேற்று 'நோ சேஞ்ச்'... இன்று 'பிக் சேஞ்ச்'! ரூ.1,240 சரிவு.! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Jewells
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (அக்டோபர் 30) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.210-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. முதல் 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது தங்கம் விலை. நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது.

தீபாவளி பண்டிகை வரவுள்ள சூழலில் தங்கத்தின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தீபாவளிக்குள் தங்கம் விலை குறையும் என்ற கணிப்புகள் ஆறுதலைக் கொடுத்தாலும், உண்மையில் விலை குறைந்தால் மட்டுமே நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 29) தங்கம் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.215-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 30) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,240 குறைந்து, ரூ.1,04,320-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.210-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,10,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான சூழலில், இன்று விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று சரிந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்
Gold Price
இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
தங்கம் விலை

தங்கம் விலை பாதியாக குறையும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதனால் நகைக் கடை வியாபாரிகள் இப்போது தங்கத்தை வாங்காமல் பொறுமை காப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவதால், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதால், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. முதலீடுகள் தொடர்ந்து குறையும் பட்சத்தில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும் இது நடக்க வேண்டுமானால் டாலரின் மதிப்பு உயர வேண்டும். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கத்தின் விலை குறையும். அதே சமயம் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விடும். ஆகையால் உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி மற்றும் தங்கம் விலை உயர்த்தப்படலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாறுவது ஏன்? ரகசியம் இதுதான்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.