

இன்று (அக்டோபர் 31) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.200-க்கு விற்பனையாகிறது.
இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சீசா விளையாட்டு போல், ஏறி ஏறி இறங்குகிறது. இந்த வாரத்தில் முதல் 3 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1,240 குறைந்தது.
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் இப்படியான ஒரு மாற்றம் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தற்போதைய விலை சரிவால் ரூ.1 லட்சத்துக்கு கீழே இறங்கும் என்ற நம்பிக்கை மீண்டும் இல்லத்தரசிகளுக்கு துளிர் விட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தங்கத்தின் விலை தாறுமாறாக ஒரே ஒரு சரிவைக் கண்டால், நிச்சயமாக ரூ.1 லட்சத்துக்குள் வந்து விடும். இருப்பினும் சந்தை நிலவரங்கள் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 30) தங்கம் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும், ஒரு சவரன் ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.210-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 31) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,480 குறைந்து, ரூ.1,01,840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,00,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த சூழலில், இன்றும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை 3,720 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்துள்ளது.
ஒருபுறம் தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் சரிந்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் பட்சத்தில் வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் கீழே சரிய வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.6 லட்சம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்பை நம்பி பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர். ஆனால் வெள்ளியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தடாலடியாக சரிந்துள்ளது.
வெள்ளி அதன் உச்சபட்ச விலையில் இருந்து 50%-கும் கீழே சரிந்ததால், முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை சரிவு சாமானிய மக்களுக்கு, தங்கம் தான் குறையவில்லை; வெள்ளியின் விலையாவது குறைந்ததே என்ற நிம்மதியைக் கொடுத்துள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.