திடீரென ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை.! இன்றைய ரேட் இதுதான்.!

இன்றைய தங்கம் விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Jewellery
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (அக்டோபர் 05) மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

கடந்த 2 வாரங்களாக தங்கத்தின் விலை சரிந்து வரும் நிலையில், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,600 வரை குறைந்தது. இதற்கு முந்தைய வாரத்திலும் ரூ.2,000-க்கும் மேல் விலை சரிந்தது.

இந்த வாரத்திலும் தங்கத்தின் விலை குறைந்தால், அது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமையும். இருப்பினும் சர்வதேச பொருளாதார நிலவரங்களும் இதற்கு சாதகமாக இருக்க வேண்டும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 4) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 5) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,675-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,400-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

வாரத் தொடக்கத்தில் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றமில்லாமல் தொடர்வது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இடைத்தேர்தலில் யார் டாப்.? அதிர வைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
தங்கம் விலை
Gold rate
Gold & Silver

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,12,080-க்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,520-க்கு விற்பனையானது. 10 நாட்களுக்கு முந்தைய விலைக்கும், 1 மாதத்திற்கு முந்தைய விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு அக்டோபர் 5-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.87,600-க்கு விற்பனையானது.

ஒரு வருட இடைவெளியில் தங்கத்தின் விலை சுமார் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடப்பாண்டு தொடக்கத்துடன் முடிந்து விட்டது. அதற்குப் பின் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமே இல்லை. ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. நடப்பாண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட்.! கைரேகை வேண்டாம்..! இனி முகத்தை காட்டினாலே போதும்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com