ரேஷன் பயனாளர்களுக்கு ஜாக்பாட்.! கைரேகை வேண்டாம்..! இனி முகத்தை காட்டினாலே போதும்.!

முதியோர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கைரேகை சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிநவீன முக அங்கீகார முறை.
முக அங்கீகாரம்
Face Recognition
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் மூலமாகவே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய கைரேகைப் பதிவு கட்டாயமாகும்.

ஒரு ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் கைரேகைப் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது e-KYC முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 2 முறை கைரேகையைப் பதிவு செய்யும் e-KYC முகாம் நடைபெற்றது. இருப்பினும் வயதான மூத்த குடிமக்கள் மற்றும் கைரேகை தேய்ந்து போன ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதில் நீண்ட காலமாகவே சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு முக அங்கீகாரத்தின் படி ரேஷன் பொருட்களை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கைரேகை பதிவுகள் விழவில்லை என்றாலும், கேமிரா முன்பு முகத்தைக் காட்டி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
"அதிமுக எம்எல்ஏ-க்களை திருடி விட்டார்கள்" கொதித்தெழுந்த இபிஎஸ்.! பரபரப்பு வீடியோ.!
முக அங்கீகாரம்

முதற்கட்டமாக மின்னணு பொது விநியோகத் திட்டத்தில் ‘முக அங்கீகார’ தொழில்நுட்பம் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ‘ஆதார் சம்வாத்’ நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா இந்தப் புதியத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் ரேஷன் சேவைகள் தடையற்ற, பாதுகாப்பான மற்றம் தகுதியான அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆவண அமைப்பு (UIDAI), தேசிய தகவலியல் மையம் மற்றும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்தப் புதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை தேய்ந்து போன குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதியவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், கேமிரா முன்பு முகத்தைக் காட்டினாலே சில நொடிகளில் ஸ்கேன் செய்து பயனாளர்களை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பம் உதவுகிறது.

இதன் மூலம் கைரேகைப் பதிவில் ஏற்படும் சிக்கல்கள் குறைவதோடு, ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

eKYC Ration Card
Ration Card
இதையும் படியுங்கள்:
நெல் கொள்முதல் முதல் ரேஷன் கடை வரை: அனைத்து புகார்களுக்கும் உதவி எண்கள் அறிவிப்பு!
முக அங்கீகாரம்

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் முக அங்கீகாரத்தின் படி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், எண்ணற்ற முதியோர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உதவியாக இருக்கும். தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதால், ரேஷன் கடையில் புதிய மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com