

22 காரட் ஆபரணத் தங்கம் இன்று (அக்டோபர் 06) ரூ.120 வரை சரிந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.4,600-க்கும் மேல் சரிந்தது. இதனால் மேலும் விலை சரியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப் போர் முடிந்தால், அது சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் தங்கத்தின் விலையில் நேரடியாக எதிரொலிக்கும். ஆகையால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 5) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 6) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,09,280-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது சற்று நிம்மதியை அளித்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்த போதே இல்லத்தரசிகள் பலரும் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை சரிந்து வருவது மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இருப்பினும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள், தங்த்தின் மீதான முதலீடு மற்றும் டாலரின் மதிப்பை பொறுத்தே இது முடிவு செய்யப்படும். சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தால், விலை கணிசமாக சரிய வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.