நகைப் பிரியர்கள் ஷாக்.!! தங்கம் விலையில் திடீர் ஏற்றம்.! இன்றைய சவரன் விலை என்ன?

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 07) ரூ.400 வரை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தின் முதல் நாளில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 வரை குறைந்தது. கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் விலை சரிந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் குறைந்து நிம்மதியைக் கொடுத்தது.

இந்த விலை சரிவு தொடர வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் சர்வதேச சந்தை நிலவரங்கள் இதற்கு சாதகமாக இருக்க வேண்டியது அவசியம். அக்டோபர் மாத இறுதிக்குள் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தால், பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புண்டு.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 6) 1 கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 7) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
​ETF-களை நம்பி முதலீடு செய்யலாமா.? ராபர்ட் கியோசாகியின் திடீர் எச்சரிக்கை.!
தங்கம் விலை
 தங்கம் விலை
Gold price

ஒரு மாதத்திற்கு முன்பு செப்டம்பர் 7-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முந்தைய விலையுடன் ஒப்பிட்டால் தற்போது தங்கத்தின் விலை ரூ.3,000-க்கும் சரிந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு 2025 அக்டோபர் 7-ல் ஒரு சவரன் ரூ.89,600-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனையானது. இந்த விலை நிலவரங்களைப் பார்க்கும் போது தங்கத்தின் விலையேற்ற இறக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

தங்கத்தில் முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், விலை சரியும் போதே முதலீடு செய்வது தான் சிறந்தது. முதலீட்டில் வெற்றி பெற்றவர்கள் கூட விலை சரியும் போது தான் அதிகளவில் முதலீட்டை மேற்கொள்வர்.

தங்கத்தின் விலை இப்போது சரிந்தாலும் கூட, வருங்காலத்தில் ஒரு சவரன் ரூ.2 லட்சத்தைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தங்கத்தின் மீதான இப்போதைய முதலீடு, வருங்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த விலையேற்றம் தொடர்ந்தது. ஆனால் அதற்குப் பின் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com