

இன்று (அக்டோபர் 09) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.840 உயர்ந்துள்ளது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடந்த 5 மாதங்களில் மட்டும் தங்கத்தின் உச்சபட்ச விலையில் இருந்து தற்போது 23% வரை சரிந்துள்ளது. இந்த சரிவு மேலும் தொடர்ந்தால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும். ஆனால் இதற்கு தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைய வேண்டியது அவசியம்.
சாமானிய மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்வதில்லை. ஆபரண நகையாக மட்டுமே வாங்குகின்றனர். இந்நிலையில் பெரு முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டில் இருந்து டாலருக்கு மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாலர் முதலீடு அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 8) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி 1 கிராம் தங்கம் ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 9) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து, ரூ.1,10,520-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ வட்டியை இந்தியன் ரிசர்வ் வங்கி உயர்த்திய நிலையில், வங்கி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் விலை சரியவும் ஓரளவு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நேற்று 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரி குறைப்பு குறித்த எந்த அறிவிப்பும் வராத சூழலில், இறத்குமதி செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை இந்தக் கூட்டத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருந்தால், ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.10,000 வரை சரிந்திருக்கும். ஆனால் வரி குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து 2026-ம் ஆண்டின் தொடக்கம் வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. ஆனால் அதற்குப் பின் ஏறினாலும், விலை வீழ்ச்சி தான் அதிகம். ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் விலை குறைந்து விடும்.
இந்நிலையில் நடப்பாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்குள் வந்து விடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.