பில் போடும் போது உஷார்! பண்டிகை காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணமா? NPCI விதிகள் இதோ?

UPI கட்டண மாற்றம்: Google Pay, PhonePe பயனர்கள் அறிய வேண்டியவை
யுபிஐ கட்டணம்
UPI Fee
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் யுபிஐ மூலமாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தற்போது அதிக அளவில் நடக்கின்றன. இதுவரை யுபிஐ பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கபடவில்லை. ஆனால் அக்டோபர் 15-ம் தேதி முதல் வணிகர்கள் ரூ.2,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைக்கு 0.4% வணிகர் தள்ளுபடி விகித (Merchant Discount Rate) கட்டணத்தை செலுத்த வேண்டும் என இந்திய தேசியச் செலுத்துதல்கள் கழகம் (National Payments Corporation of India) தெரிவித்தது.

யுபிஐ பணப்பரிமாற்றத்தில் ரூ.3000-க்கு ரூ.12 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.50,000-க்கு ரூ.200-ம். ரூ.75,000-க்கு மேற்பட்ட பரிவா்த்தனைகளுக்கு ரூ.300 என உச்சவரம்பு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மீண்டும் பொதுமக்கள் ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கு மாறினால், அது ரிச்ர்வ் வங்கிக்கே ஆபத்தாக மாறி விடும். இதனால் சிறு வணிகர்கள் மீண்டும் பணப் புழக்கத்திற்கு மாறி விடுவார்கள் என்பதால், இந்தக் கட்டணத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று MDR கட்டணம் அமலுக்கு வருவது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் கூறுகின்றன

விரைவில் ஆயுத பூஜை, தசரா மற்றும் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்வார்கள். இந்த சூழலில் MDR கட்டணத்தால், வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் யுபிஐ பரிவர்த்தனைக்கு விதிக்கப்பட உள்ள MDR கட்டண்தை 2027 ஜனவரியில் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் MDR கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே; பொதுமக்களுக்கு அல்ல என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இருப்பினும் பண்டிகை காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைக்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்தக் குழப்பம் தீர வேண்டுமெனில் NPCI விதிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

UPI Payments
UPI transaction
இதையும் படியுங்கள்:
உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கண்காணிக்கிறதா?உண்மை நிலை என்ன?
யுபிஐ கட்டணம்

NPCI விதிமுறைகள்:

1. வாடிக்கையாளர்களுக்கு இலவசம்:

யுபிஐ மூலமாக ஷாப்பிங் செய்யும் போது, வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை 1% - 2% வரை கட்டணம் செலுத்த வேண்டும் என சில கடைகளில் கூறினால் அது NPCI விதிமுறைக்கு எதிரானது. இம்மாதிரியான சூழலை வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்.

2. வணிகர்களுக்கு மட்டுமே கட்டணம்:

வாடிக்கையாளர்கள் ரூ.2,000-க்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்யும்போது, வணிகர்கள் மட்டுமே 4% MDR கட்டணத்தை செலுத்த வேண்டும்.

3. RuPay கிரெடிட் கார்டு யுபிஐ:

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மற்றும் RuPay கிரெடிட் கார்டு இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைக்கு MDR கட்டணம் பொருந்தும். RuPay கிரெடிட் கார்டு இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனையை நிராகரிக்க வணிகர்களுக்கு உரிமை உண்டு. ஆகையால் இம்மாதிரியான பணப் பரிமாற்றத்தை செய்வதற்கு முன்பு RuPay கிரெடிட் கார்டு யுபிஐ-க்கு அனுமதி உண்டா என கடைக்காரரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையில் அதிரடி ட்விஸ்ட்.! இன்றைய விலை நிலவரம் இதோ.!
யுபிஐ கட்டணம்

கூடுதல் கட்டணக் கொள்ளையில் இருந்து தப்பிப்பது எப்படி?

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சில கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புண்டு. ஆகையால் ஷாப்பிங் செய்த பிறகு உங்கள் பில்லை சரிபார்க்க வேண்டும்.

பில்லில் யுபிஐ கட்டணம் அல்லது டிஜிட்டல் கட்டணம் என ஏதாவது இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

கூடுதல் கட்டணத்தை செலுத்த சொல்லி வணிகர்கள் கட்டாயப்படுத்தினால், NPCI இணையதளம் அல்லது UPI செயலியில் புகார் அளிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com