வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?இந்த சிறப்பு முகாமை மிஸ் பண்ணாதீங்க! முழு வழிகாட்டி!

முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் புதிய பதிவுகளுக்கான படிவ விவரங்கள் இதோ.
வாக்காளர் சிறப்பு முகாம்
Special Camp
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் 18 வயதை பூர்த்தி செய்த முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க நாளை மறுதினம் (அக்டோபர் 10) மாவட்டம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இளம் தலைமுறை வாக்காளர்களை அதிகளவில் இணைக்க நகர்ப்புறங்கள் மற்றும் பெருநகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, நீக்கம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் தொலைபேசி எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சிறப்பு முகாம் நடைபெறும் தேதி: அக்டோபர் 10 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடம்: உங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் (அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்).

எந்தெந்தப் பணிகளுக்கு என்ன படிவம்? ​

1. படிவம் 6 (Form 6):

18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் அட்டையைப் பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ஐ நிரப்ப வேண்டும். ​

2. படிவம் 6A (Form 6A):

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6A-ஐ நிரப்ப வேண்டும். ​

3. படிவம் 7 (Form 7):

உயிரிழந்தவர்கள் அல்லது நிரந்தரமாக இட மாற்றம் செய்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் படிவம் 7-ஐ நிரப்ப வேண்டும்.

4. ​படிவம் 8 (Form 8): முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி, புகைப்படம் திருத்தம், ஆதார் எண் மற்றும் கைபேசி எண் இணைப்புக்கு படிவம் 8-ஐ நிரப்ப வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரெப்போ வட்டி உயர்வு.!! எகிறப் போகும் EMI: நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
வாக்காளர் சிறப்பு முகாம்
Voters Special camp
special campimage credit-newindianexpress.com

தேவையான ஆவணங்கள்: ​

1. முகவரி சான்று: ஆதார் கார்டு, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்குப் புத்தகம். ​

2. வயது சான்று: பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். புதிய வாக்காளர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வயது சான்றிதழ் கட்டாயமாகும். ​

3. பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம்.

4. வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வதற்கு கூடுதலாக பழைய வாக்காளர் அடையாள அட்டை நகல் அல்லது EPIC எண் வேண்டும்.

சனிக்கிழமை நடக்கவுள்ள முகாமிற்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (voters.eci.gov.in) அல்லது Voter Helpline செயலி வழாயாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையில் அதிரடி ட்விஸ்ட்.! இன்றைய விலை நிலவரம் இதோ.!
வாக்காளர் சிறப்பு முகாம்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தப் பணி (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் SIR மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைய சிறப்பு முகாம்களையும் நடத்தியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் SIR பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது புகார் எழுந்துள்ளது. பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவகள் SIR ஆல் தான் மாறியது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பொருட்டு நாளை மறுதினம் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.

logo
Kalki Online
kalkionline.com