

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 14) 1 கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம் :
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 15) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலையைப் பொறுத்த வரையில், இந்த வருடத் தொடக்கத்தில் தான் உயர்வு இருந்தது. அதற்குப் பின் ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. ஒரு நாள் விலை குறைந்தால், மறுநாள் விலை ஏறி விடுகிறது. இதனால் தான் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழே குறையவில்லை. ஆனால்
அடுத்த சில நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. இதனால் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கே கீழே வந்து விடும் எனக் கூறப்படுகிறது.
அப்படி குறைந்தால் அது இந்தய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.