பரிசுகளை பரிமாறிக்கொண்ட தல - தளபதி.! சர்ப்ரைஸ் கிஃப்ட் என்ன தெரியுமா.?

தல – தளபதி மேஜிக்! பரிசுகளை பரிமாறிக்கொண்ட விஜய் - அஜித்... பின்னணியில் என்ன நடந்தது?
விஜய் - அஜித்
Vijay - Ajith
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் 10-ம் தேதி பிரிட்டனுக்குச் சென்றார். லண்டன் சில்வர் ஸ்டோன் மைதானத்தில் நடந்த மிச்செலின் லீ மைன்ஸ் கார் ரேஸ் பந்தயத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்.

இந்த போட்டியில் அஜித் குமாரின் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் இந்த சந்திப்பு உலகளவில் மிகவும் வைரலானது. மேலும் இந்த சந்திப்பால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் ரீதியாக ஆதாயம் இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நடிகர் அஜித்துடன் நட்பு ரீதியாக பேசி வரும் முதல்வர் விஜய், அஜித் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்து விடுவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
சட்டசபை முதல் கில்லி வரை: சென்னையில் வைரலாகும் முதல்வர் விஜய் விநாயகர் சிலைகள்!
விஜய் - அஜித்

முதல்வர் விஜய் அஜித்துக்கு ரேஸிங் கார் பொம்மை ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் பரிசில் “பிரியமுடன் விஜய் To My Lovely Brother Ajith” எனக் கையெழுத்திட்டுள்ளார். இந்த கார் பொம்மையில் Ajithkumar Racing என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித்தும் ஹெல்மெட் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் பரிசில், “Love, அஜித் குமார்” எனக் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த இரண்டு நடிகர்கள் இன்று இரு வேறு பாதைகளில் பயணித்து வருகின்றனர். தமிழக சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கிய தமிழக முதல்வர் விஜய் மற்றும் ரேஸர் அஜித்குமாரின் இந்த சந்திப்பு தமிழக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நாளை மறுதினம் (செப்டம்பர் 16) முதல்வர் விஜய் தமிழகம் திரும்பவுள்ள நிலையில், இன்று அஜித்திற்கு பரிசு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் அஜித் இருவரும் பரசிகளை பரிமாறிக் கொள்வது இதுவே முதல்முறை.

இருவரும் சினிமா துறையில் இருந்தவரை, பெரிதாக பேசியது கூட கிடையாது. ஆனால் லண்டனில் இருவரின் நட்பைப் பார்த்ததும் தமிழக மக்களே ஒரு கணம் பிரமித்துப் போயினர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமாரின் தாயார் இறந்த போது, முதல்வர் நேரில் சென்று ஆறுதலீ கூறினார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இடைத்தேர்தல்: திமுகவுக்கு தேமுதிக ஆதரவு - பிரேமலதா அறிவிப்பு.!
விஜய் - அஜித்
அஜித் - விஜய்
Vijay - Ajith

தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய முதல்வர் விஜய், லண்டனில் எத்தனை முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழகம் வந்த பிறகே இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் விஜய் - அஜித் குறித்த பேச்சுகள் தான் தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது

logo
Kalki Online
kalkionline.com