

உலகளாவிய பொருளாதார மாற்றங்களினால், தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் நிகழ்கிறது. ஆனால் இந்த மாற்றம் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.
கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சீசா விளையாட்டு போல் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்தது. இதன்படி கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.920 மட்டுமே விலை குறைந்தது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 20) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை. தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.14,285-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.260-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று (செப்டம்பர் 21) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.கடந்த வார இறுதியில் தங்கம் விலை ரூ.2,000-க்கும் மேல் உயர்ந்து அதிர்ச்சி அளித்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் விலை குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியைத் தந்துள்ளது.
இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க மத்திய வங்கியில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், டாலரின் மீதான முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இந்தியாவிலும் உள்நாட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.