

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகமானதால், தங்கத்தின் விலை பெருமளவு சரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை.
ஆகையால் சிறு முதலீட்டாளர்களின் கவனம் எல்லாம் தற்பேது மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் பக்கம் திரும்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைகளைப் பொறுத்து தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 21) தங்கத்தின் விலை ரூ.120 குறைந்தது. தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 22) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,13,480-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாத சூழலில், முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. அதே சமயம் விலை குறையும் எனக் காத்திருக்கும் சாமானிய மக்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கவில்லை. ஒரு நாள் ஏறினால், மறுநாள் விலை குறைவதால் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை.
ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் குறைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.