​"அச்சப்பட வேண்டாம்... ஆனால்.!" உண்ணி காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை விடுத்த திடீர் எச்சரிக்கை!

Scrub Typhus
Dengue Fever
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலும், உன்னி காய்ச்சலும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுரைத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 79 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 17,277 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காய்ச்சலால் மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டையணுக்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் சென்னையிலேயே சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உண்ணி காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே பரபரப்பு.!! பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: DPI-யின் டிஜிட்டல் மூவ்.!
Scrub Typhus

சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், “உண்ணி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,648 பேர் மட்டுமே உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயல்வெளிகள், புற்கள் மற்றும் புதர்வெளி பக்கம் செல்லும் போது பொதுமக்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் மற்றும் பருவ மழையால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. உண்ணி காய்ச்சல் ஏற்பட்டால் சோர்வு மற்றும் பசியின்மை உள்ளிட்ட சாதாரண அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், உண்ணி காய்ச்சல் பாதிப்பும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறை இயக்குநரின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்துள்ளது.

Dengue Fever
Dengue Fever
இதையும் படியுங்கள்:
கேரளா நிலச்சரிவு: சென்னை பெண் உள்பட 9 பேர் பலி; பதற வைக்கும் காட்சி..!
Scrub Typhus

நேற்று ஒரே நாளில் 228 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 29 பேருக்கு உண்ணி காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com