

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) ஒரு சவரனுக்கு ரூ.400 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 22) ஒரு சவரனுக்கு ரூ.680-ம், நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) ரூ.120-ம் குறைந்தது. இதன்படி கடந்த 2 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.800 மட்டுமே குறைந்தது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களிலாவது விலை குறையுமா என பலரும் எதிர்பார்க்கின்றர்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 22) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 23) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,13,080-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
நடப்பாண்டு மே மாதத்தில் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது. அதோடு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று ‘தேவையின்றி தங்கத்தை வாங்க வேண்டாம்’ என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை இதேபோல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தால், இந்த ஆண்டு இறுதியில் பெரிய அளவில் மாற்றமில்லாமலேயே நீடிக்கும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.