வந்தாச்சு புது ரூல்ஸ்..!! இனி டெம்பர் கிளாஸுக்கும் BIS சான்றிதழ் கட்டாயம்.!

ஸ்மார்ட்போன் வெடிப்பைத் தடுக்க டெம்பர்டு கிளாஸ்களுக்கு பிஐஎஸ் தரச்சான்று கட்டாயம் என அறிவிப்பு.
BIS தரச் சான்றிதழ்
Temper Glass
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய சந்தையில் போலியான மொபைல் போன் உதிரி பாகங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிராண்ட் பெயர் இன்றி இந்தியாவிற்கு கள்ள சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு, போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அசல் போன்றே விற்கப்படுகின்றன. இதனால் அசல் எது போலி எது என்று தெரியாமல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

போலியான உதிரி பாகங்கள் அதிகளவில் சூடாவதால், மொபைல் போன்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு போலியான டிஸ்பிளே, டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஸ்கிரீன் கார்டுகள் அதிக மின்னழுத்தத்தில் இயங்கும் போது, மதர் போர்டை செயலிழக்கச் செய்து விடும். இதனால் மொபைல்போன் விரைவிலேயே முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

இந்நிலையில் இதனைத் தடுக்கும் வகையில் டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஸ்கிரீன் கார்டுகளுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards - BIS) தரச் சான்றைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி வருகின்ற 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தரமற்ற டெம்பர்டு கிளாஸ்களின் விற்பனை நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தூத்துக்குடியில் பரபரப்பு..! த.வெ.க-வுக்கு அஜித் ஆதரவு என போஸ்டர்... கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்!
BIS தரச் சான்றிதழ்

மொபைல் போன்கள் அனைவருக்குமே அத்தியாவசியப் பொருளாக மாறி விட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தரமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அதுவே நம் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி விடும். ஏனெனில் டிஸ்பிளேவினால் கண்கள் பாதிப்பு மற்றும் மொபைல்போன் வெடிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.

இந்திய சந்தையில் குறைந்த விலையில் விற்பனையாகும் தரமற்ற மற்றும் போலியான டெம்பர்டு கிளாஸ்கள் மொபைல்போனின் தொடுதிரையை மந்தமாக்கி விடும். போன் கீழே விழுந்தால் எளிதாக உடையும் அபாயமும் உள்ளது.

இதில் உள்ள ஆபத்தான ரசாயனக் கலவையைக் கொண்ட கண்ணாடிகள், வாடிக்கையாளர்களின் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தரச் சான்றிதழை கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு.

இனி இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஸ்கிரீன் கார்களுக்கும் தொடுதிரை உணர்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை உள்ளிட்ட சோதனைகளுக்குப் பிறகே விற்பனைக்கு வரும்.

இதன்மூலம் அடுத்த ஆண்டிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தரமான டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஸ்கிரீன் கார்டுகள் கிடைக்கும். மேலும் அங்கீகரிக்கப்படாத மற்றும் போலியாக இறக்குமதி செய்யப்படும் டெம்பர்டு கிளாஸ்கள் உள்ளூர் சந்தையிலிருந்து நீக்கப்படும்.

Fake Temper Glass
Temper Glass
இதையும் படியுங்கள்:
"தவெக அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை; ஆனால் ஒரு நிபந்தனை உண்டு" - மு.வீரபாண்டியன்..!
BIS தரச் சான்றிதழ்

சந்தையில் ​தரச் சான்றிதழ் பெற்ற தரமான தயாரிப்புகள் மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என்பதால், நம்பகமான, பாதுகாப்பான தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

மொபைல் போனால் நிகழும் தொடர் விபத்துகள், போலி தயாரிப்புகள் மற்றும் மின்கழிவு அபாயங்களைத் தடுப்பதற்காகவே சார்ஜர்கள் மற்றும் கேபிள்கள் மட்டுமின்றி ஸ்கிரீன் கார்டுகளுக்கும் பிஐஎஸ் (BIS) தரக்கட்டுப்பாட்டு விதிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

உதிரி பாகங்கள் விலை உயர்வால், மொபைல் போன்களின் விலை 20% வரை உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மொபைல் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான உதிரி பாகங்களின் மூலம் செலவுகள் அதிகமானாலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது மத்திய அரசு.

logo
Kalki Online
kalkionline.com