​4 நாள் சரிவுக்கு ‘திடீர்’ பிரேக்! 5வது நாளில் எகிறிய தங்கம் விலை: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
gold price
gold priceimage credit-dailynewsegypt.com
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 25) ஒரு சவரனுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலையில் மாற்றமில்லால் நேற்றைய விலைக்கு விற்பனை.

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே குறைந்து வருகிறது. திங்கட்கிழமை அன்று ஒரு சவரன் ரூ.120 குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ரூ.680, ரூ.400 மற்றும் ரூ.1,080 என தொடர்ந்து சரிந்தது.

இதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்தது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை இருப்பதால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழே குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 24) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 25) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.1,12,080-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
"உள்ளே வா தம்பி" என்றதற்கு உதை பரிசா? நடத்துனரை தாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்! பரபரப்பு வீடியோ.!
gold price
தங்கம் விலை
Gold price

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த மத்திய வங்கிகள் கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை சரியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்த வாரம் முழுவதும் தங்த்தின் விலை தொடர்ந்து சரிந்தது.

இந்த சரிவு இனியும் தொடர்ந்தால், தங்கத்தின் விலை 4 இலக்க எண்களுக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விட்டால், விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஆனால் தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கவுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது நடந்தால் நிச்சயமாக தங்கத்தின் விலை பெரும் சரிவை சந்திக்கும்

இதையும் படியுங்கள்:
ஓடும் ரயிலில் சிக்கி நூலிழையில் தப்பிய முதியவர்: துரிதமாக செயல்பட்ட RPF Police! பதற வைக்கும் காட்சி!
gold price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com