"உள்ளே வா தம்பி" என்றதற்கு உதை பரிசா? நடத்துனரை தாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்! பரபரப்பு வீடியோ.!

போரூரில் பேருந்து நடத்துனர் மீது மாணவர்கள் தாக்குதல்: வைரல் வீடியோ
பள்ளி மாணவர்கள்
Bus conductor
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

பேருந்துகளில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வது ஆபத்தானது. படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்தால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மாநகரப் போக்குவரத்து துறை பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதையும், ஓடும் பேருந்தில் ஏறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 24) காலை சென்னை போரூரில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே ஏறி வரும்படி அறிவுரைத்த நடத்துனரை மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது ஆபத்தானது மட்டுமின்றி, அது மற்ற பயணிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் கூட்டமாகவே காணப்படும் இம்மாதிரியான சமயங்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இருப்பினும் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தாலும் அதிலிருந்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முன்புறம் மற்றும் பின்பறுத்தில் கதவுகளை மூடும் வசதி அனைத்துப் பேருந்துகளிலும் கொண்டு வரப்பட்டது. பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்ட பிறகு கதவுகளை ஓட்டுநர் மூடிவிட்டால், அதன் பிறகு பேருந்தில் ஏற முடியாது. மேலும் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டுகளில் நின்றாலும் கதவுகள் மூடி இருப்பதால் விபத்து ஏற்படுவது தடுக்கப்படும்.

இந்நிலையில் சென்னை போரூரில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததால், ஓட்டுநர் கதவை மூடவில்லை. இந்நிலையில் மேலே ஏறி வாருங்கள் என நடத்துனர் மாணவர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், உள்ளே வர முடியாது எனக் கூறி ரகளை ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் நடத்துனரை சரமாரியாக தாக்கினர்

இதையும் படியுங்கள்:
இனி தாராளமா தாளிக்கலாம்! சமையல் எண்ணெய் விலைக்கு பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு.!
பள்ளி மாணவர்கள்

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நடத்தினர் அறிவுரைத்த நிலையில், இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு நடத்துநரையும் தாக்கியுள்ளனர்.

மாணவர்களை சக பயணிகள் தடுக்க முயற்சித்தும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் காரணமாக பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்ட நிலையில், மற்ற பயணிகள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக வேட்பாளர்களுக்கு கிரீன் சிக்னல்.. இடைத்தேர்தல் தடை வழக்கு தள்ளுபடி.!!
பள்ளி மாணவர்கள்

நல்லது சொன்னால் யார் தான் கேட்பார் என்பது போல் உள்ளது இந்த சம்பவம். நல்லதை நினைத்து நடத்துநர் சொன்ன அறிவுரை இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடிக்கவில்லை போல.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருந்தால் தான் வருங்காலத்திலும் ஒழுக்கமாக இருப்பார்கள். இல்லையெனில் இப்போதே வயதில் பெரியவரை அடிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் என்னவெல்லாம் செய்வார்களோ!

தமிழக அரசும், ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மாணவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com