தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!! ஒரே நாளில் ரூ.1,880 சரிவு.!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 28) ஒரு சவரனுக்கு ரூ.1,880 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5,000 சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்தது. இந்த விலை சரிவு இந்த வாரமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தை ஆபரண நகையாக வாங்குவது பெருமளவு குறைந்து விட்ட நிலையில், சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு மட்டும் அதிகரித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதன்படி தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 28) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,880 குறைந்து, ரூ.1,10,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் குறைந்த நிலையில் இன்றும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்: நூலிழையில் உயிர் தப்பிய 29 பேர்.! திக் திக் வீடியோ..!
தங்கம் விலை
Gold and Silver Rates
Gold and Silver

நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளது. இதனால் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.20 லட்சம் வரையிலான அளவிலேயே ஏறி ஏறி இறங்குகிறது.

இதே நிலை தொடர்ந்தால், நடப்பாண்டின் இறுதியில் தங்கத்தின் விலை 1 லட்சத்திற்கு கீழே வருவது சந்தேகம் தான். அதே சமயம் விலை உயரவும் வாய்ப்பில்லை.

வருங்காலத்தில் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என நகை வர்த்தக சங்கத் தலைவர் ஜெயந்திலால் தெரிவித்திருக்கிறார். இவரது கூற்று உண்மையானால், இன்றே தங்கத்தில் முதலீடு செய்தால் வருங்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இதையும் படியுங்கள்:
ஐபோனால் கூட தொட முடியாத உச்சம்: நோக்கியா 1100 செய்த மெகா சாதனை.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com