ஐபோனால் கூட தொட முடியாத உச்சம்: நோக்கியா 1100 செய்த மெகா சாதனை.!

5G யுகத்திலும் அசைக்க முடியாத உலகின் நம்பர் 1 மொபைல் போனின் உண்மைப் பின்னணி
நோக்கியா 1100
Nokia 1100
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தொலைவில் இருக்கும் ஒருவரிம் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கருவி தான் மொபைல். ஆனால் இன்று சந்தையில் விற்பனையாகி வரும் மொபைல்போன்களில் உலகையே அடக்கி ஆளும் பல்வேறு அதிநவீன வசதிகள் வந்து விட்டன.

நாளுக்கு நாள் மொபைல்போனில் புதுப்புது வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் எந்த ஒரு மொபைல்போன் மாடலும் நோக்கியா 1100 மாடலின் சாதனையை இன்று வரை முறியடிக்கவில்லை. உலகளவில் மிக உயர்ந்த பிராண்டாக கருதப்படும் ஆப்பிள் ஐபோனால் கூட நோக்கியாவின் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறுகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் எத்தனையோ அதிநவீன வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்கள் அறிமுகமாகி கோடிக்கணக்கில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சாதாரண பேசிக் பட்டன் போனின் விற்பனை சாதனையை, எந்த ஒரு நிறுவனத்தாலும் நெருங்கக் கூட முடியவில்லை. மொபைல்போன் உலகின் வரலாற்று நாயகன் என்று நோக்கியா 1100 (Nokia 1100) மாடலை சொன்னால் கூட அது பொருத்தமாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்: நூலிழையில் உயிர் தப்பிய 29 பேர்.! திக் திக் வீடியோ..!
நோக்கியா 1100

கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 1100 போன் மாடல், மொபைல் போன் வரலாற்றிலேயே அதிகளவில் விற்பனையான தனித்துவமான மொபைல்போனாக திகழ்கிறது. உலகளவில் சுமார் 25 கோடிக்கும் அதிகமான (250+ மில்லியன்) நோக்கியா 1100 மாடல்கள் விற்பனையாகி, உலக சாதனை படைத்துள்ளது.

மிகக் குறைந்த விலையில் தரமான ஒரு மொபைல் கிடைக்கும் என்றால் அதற்கு நோக்கியா 1100 மாடலைத் தான் எடுத்துக்காட்டாக கூற வேண்டும். இதுதவிர கெட்டியான கட்டமைப்பு, டார்ச் லைட், நீடித்த பேட்டரி ஆயுள், ஸ்நேக் கேம், தூசி புகாத ரப்பர் கீபேட் என இந்திய மக்களின் மனதை வென்ற பல அம்சங்கள் நோக்கியா 1100 மாடலில் உள்ளன.

ஆப்பிள், சாம்சங், மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் விவோ உள்ளிட்ட பல விதமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் இருந்தாலும், இந்நிறுவனங்கள் செய்ய முடியாத ஆகப் பெருஞ்சாதனையை நோக்கியா நிறுவனம் படைத்து விட்டது

நோக்கியா 1100
Nokia 1100
இதையும் படியுங்கள்:
அடிதூள்.. "வரிவிலக்கு முதல் தனி ஓடிடி வரை" அமைச்சரின் மெகா அறிவிப்புகள்.!
நோக்கியா 1100

முக்கிய அம்சங்கள்:

டார்ச் லைட்: மின்வெட்டு அதிகம் இருந்த அந்தக் கால நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

நீடித்த பேட்டரி: போனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே, பல நாட்களுக்குத் தாங்கும் நீடித்த பேட்டரி அமைப்பு இதில் இருந்தது.

ஸ்நேக் கேம்: இப்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போனில் பல கேம்களை விளையாடினாலும், அந்தக் காலத்து மொபைல் பிரியர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்காக ஸ்நேக் கேம் இருந்தது.

ரப்பர் கீபேட்: உழைக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ரப்பர் கீபேட் அருமையான அனுபவத்தைக் கொடுத்தது.

ஆதிக்கம் நிறைந்த 5G தொழில்நுட்ப யுகத்திலும், ஒட்டுமொத்த நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் வரலாற்றில் அதிகமாக விற்பனையான மொபைல் மாடல் என்ற மகுடம் இன்னும் ‘நோக்கியா 1100’ வசமே உள்ளது. இந்த சாதனையை இனி எந்தப் ஸ்மார்ட்போனாலும் முறியடிக்க முடியாது என்றே சொல்லப்படுகிறது.

இன்று நோக்கியா 1100 மொபைல்போன் பற்றி கேட்டால் கூட பலரும் தரமான போன் என்றே சொல்வார்கள். சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வசதி விரிவடையாத அநதக் காலகட்டத்தில் நோக்கியா 1100 போன் தான் பலரையும் இணைத்தது.

logo
Kalki Online
kalkionline.com