நகை வாங்குவோர் குஷி.!! மீண்டும் சரிந்த தங்கம்.! ரூ.5,000 குறைந்த வெள்ளி.!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 29) ஒரு சவரனுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5,000 சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ரூ.2,280 வரை குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2,680 குறைந்தது. நேற்று காலையில் சவரனுக்கு ஒரு சவரனுக்கு ரூ.1,880 குறைந்த நிலையில், மீண்டும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாலையில் ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.5,000 வரை குறைந்தது.

இந்த விலை சரிவு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு, தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலை மேலும் குறையும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 28) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.335 குறைந்து ரூ.13,665-க்கும், ஒரு சவரன் ரூ.2,680 குறைந்து ரூ.1,09,320-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 29) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து, ரூ.1,09,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை 2 முறை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தாய்மாமனாக நின்ற முதல்வர் விஜய்.! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.!
தங்கம் விலை
Gold & Silver Price
Gold & Silver

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் மெல்ல மெல்ல சரிந்து வந்தது. இந்த வாரத்தின் முதல் நாளே ரூ.2,680 வரை சரிந்தது. இந்த சரிவு மேலும் தொடர்ந்தால், விரைவில் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும். இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான்.

ஆனால் இது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் விற்பனையாகி வருகிறது. ஆகையால் எப்போது விலை ஏறும் என்றே சொல்ல முடியாது.

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 29-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முந்தைய விலையுடன் ஒப்பிட்டால் தற்போது தங்கத்தின் விலை ரூ.6,000-க்கும் சரிந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
"ஒரு தேசிய விருது கூட வாங்கல" முதல்வரை நேரடியாக அட்டாக் செய்த இபிஎஸ்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com