"ஒரு தேசிய விருது கூட வாங்கல" முதல்வரை நேரடியாக அட்டாக் செய்த இபிஎஸ்.!

70 படங்களில் நடித்தும் ஒருமுறை கூட தேசிய விருதை பெறாதவர் உங்கள் தலைவர் என முதல்வர் விஜய்யை நேரடியாக விமர்சனம் செய்தார் இபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி
Eps vs CM Vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 28) தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஆளுங்கட்சியான தவெக-வை விமர்சித்து இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தப் பிரச்சாரத்தில் 70 படங்களில் நடித்தும் ஒருமுறை கூட தேசிய விருதை பெறாதவர் உங்கள் தலைவர் என முதல்வர் விஜய்யை நேரடியாக விமர்சனம் செய்தார் இபிஎஸ்.

இதையும் படியுங்கள்:
முதல்வர் விஜய்யை விசாரிக்க திமுக புகார் மனு - தமிழக அரசியலில் வெடித்தது புயல்!
எடப்பாடி பழனிசாமி

பரப்புரையின் போது இபிஎஸ் பேசுகையில், “திமுக-வாக இருந்தாலும் சரி; தவெக-வாக இருந்தாலும் சரி; அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர் தான். அதிமுகவை நம்பி தான் தவெக கட்சி நடத்துகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டை ஆள்வது அதிமுக தான். அதிமுக கரைந்து விடும் என்கிறார் ஆதவ் அர்ஜூனா. கரைந்து போவதற்கு அதிமுக என்ன சர்க்கரையா? அதிமுக பலம் வாய்ந்த இரும்பாகும்.

ஒரு சிறுமிக்கு சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாத பொல்லாத ஆட்சியை நடத்தும் முதல்வர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்?

முதல்வர் என்ன சாதனை செய்தார் என ஆதவ் அர்ஜூனாவால் சொல்ல முடியுமா? 70 படங்களில் நடித்தும் கூட ஒரு தேசிய விருது கூட வாங்காதவர் தான் உங்கள் தலைவர்.

மீண்டும் மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்யப்போகும் முதல்வர், பிற கட்சிகளை நோக்கி வெறும் காற்றில் வாள் வீசப் போகிறாரா அல்லது பாலியல் சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்கப் போகிறாரா” என இபிஎஸ் பேசினார்.

இடைத்தேர்தலிலும் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என தவெகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதிகளையும் அதிமுக தான் வென்றது. இருப்பினும் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு கொடுக்காதது, அக்கட்சிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. பாமக ஆதரவு இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் அதிமுக வென்றால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

Edappadi Palanichami
EPS
இதையும் படியுங்கள்:
#BREAKING: தாய்மாமனாக நின்ற முதல்வர் விஜய்.! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.!
எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுவதால், யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதைக் கணிப்பதே கடினமாக உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் இந்த 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்குகின்றனர். ஏற்கனவே அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்று விட்டு, தற்போது தவெக சார்பில் ஓட்டு கேட்கிறீர்களா என சில இடங்களில் எதிர்ப்பு குரல்கள் வலுக்கின்றன.

இருப்பினும் முதல்வர் விஜய் வருகையால் இந்த 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்தார். இதில் முதல்கட்டமாக மதுராந்தகத்தில் ஏற்கனவே பிரச்சாரத்தை முடித்து விட்டார் முதல்வர் விஜய்.

logo
Kalki Online
kalkionline.com