#BREAKING: தாய்மாமனாக நின்ற முதல்வர் விஜய்.! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.!

சொன்னதைச் செய்த முதல்வர் விஜய்; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் அதிரடித் தொடக்கம்!
தாய்மாமன் தங்க மோதிரம்
Thaimaman Thanga Modhiram
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை சற்றுமுன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தொடக்கி வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய். இந்த விழாவில் அமைச்சர் நிர்மல்குமார், அருண்ராஜ் மற்றும் என்.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தடைந்தார் முதல்வர் விஜய். அங்கிருந்து சுமார் 16 கிமீ சாலை மார்க்கமாக பயணித்து, ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றார். முதல்வரின் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் செல்லும் வழிநெடுக பொதுமக்ள் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக சில பெண்களும், குழந்தைகளும் “தாய் மாமனே வருக வருக” என்ற பதாகைகளை கையில் ஏந்தி முதல்வரை வரவேற்றனர்.

முதல்வர் சென்ற வாகனத்தை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தையை முதல்வர் விஜய் தூக்கி, பொதுமக்களுக்கு கைகாட்டினார்.

வாகனத்தில்செல்லும் போது பொதுமக்களில் ஒருவர் அளித்த மனுவை பாதுகாவலர் மூலம் முதல்வர் விஜய் பெற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
ஷாக்.! இந்த 2 மாவட்ட மக்களுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்காது..! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!
தாய்மாமன் தங்க மோதிரம்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக முதல்கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு ஜூன் 22-ம் தேதியில் இருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 107 சிறப்பு மையங்கள் தினந்தோறும் செய்லபட உள்ளன.

இனிமேல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போதே மோதிரம் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70% மோதிரங்களையும், கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 30% மோதிரங்களையும் தயார் செய்ய டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் மோதிரங்களை செய்ய தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி மற்றும் சேதாரத்திற்கு 1 பைசா மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன.

முன்னதாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் திட்டம் ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனைக்கு உள்ளே இத்திட்டத்தை தொடக்கி வைத்து மோதிரங்களை வழங்கினால், அதிகளவு கூட்டத்தால் குழந்தைகளுக்கு தொற்று அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தொடக்கி வைக்க மேடை அமைக்கப்பட்டது.

இதன்படி ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் விஜய் 30 குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரங்களை அணிவித்துத் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடக்கி வைத்தார்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்AI image
இதையும் படியுங்கள்:
முதல்வர் விஜய்யை விசாரிக்க திமுக புகார் மனு - தமிழக அரசியலில் வெடித்தது புயல்!
தாய்மாமன் தங்க மோதிரம்

தாய்மாமனுக்கு பெயர் போன மாவட்டமான மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைத்ததில் மதுரை மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சொன்னதை சொன்னபடியே அதுவும் ஆட்சிக்கு வந்த சகல மாதங்களிலேயே இத்திட்டத்தை முதல்வர் தொடாங்கியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர்த்து இந்தத் திட்டம் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் முடிந்த பிறகு அந்த 2 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கப்படும்.

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ முதல்வர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அங்குப் பிறந்த 30 பச்சிளங்குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்களை அவர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com