​'டக்'கென எகிறிய தங்கம் விலை: ஆடிப்போன நடுத்தர வர்க்கம்.! இன்றைய விலை நிலவரம்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை
Gold price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30) ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5,000 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் படிப்படியாக குறைந்து வந்த தங்கம் ரூ.2,280 வரை குறைந்தது. இந்த வாரத் தொடக்க நாளில் ரூ.2,680 குறைந்தது.

நேற்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்தது. வெள்ளி விலையும் ஒரு கிலோவிற்கு ரூ.5,000 வரை குறைந்தது. இந்த விலை சரிவு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 29) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 30) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தவெக அமைச்சரவை அதிரடி மாற்றம்: பதவி இழக்கும் 3 அமைச்சர்கள் யார்.? மதுரைக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
தங்கம் விலை

தங்கத்தின் விலை சரிவு தொடரும் பட்சத்தில் விரைவிலேயே ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும். இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். ஆனால் இது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் விற்பனையாகி வருகிறது. ஆகையால் எப்போது விலை ஏறும் என்றே சொல்ல முடியாது.

gold price
gold price
இதையும் படியுங்கள்:
தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்புமா சென்னை.! 5 டிஎம்சி நீர் மட்டுமே மிச்சம்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com