அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..! இரண்டு சிலிண்டர் வைத்திருப்போருக்கு புதிய கட்டுப்பாடு..!!

ஒரே நாளில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Gas cylinder
Gas cylinder
Published on

கடந்த சில நாட்களாகவே சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்களால் இந்தியாவிலும் வர்த்தக ரீதியாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்த போர் பதற்றம், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளதுடன் தற்போது சமையல் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தையும் பாதிக்க தொடங்கியுள்ளது.

ஈரான் நிர்வகித்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போர் பதற்றத்தால் இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

போர் எப்போது முடியும் என்று தெரியாத சூழ்நிலையில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை உஷார்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. கையிருப்பு இருப்பதாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ள அதேவேளையில், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! சென்னையில் எகிறிய சிலிண்டர் விலை!
Gas cylinder

இந்நிலையில் நேற்று திடீரென இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

அதன்படி, ரூ.869க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.60 விலை அதிகரித்து ரூ.929க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், சென்னையில் ரூ.2,044க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ.115 விலை உயர்ந்து ரூ.2,044க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், கடந்த மார்ச் 1-ம்தேதி ரூ.30 விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உயர்ந்துள்ள விலையும் சேர்த்து ஒரே வாரத்தில் ரூ. 145 வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால் சாமானிய மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால், சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கொல்கத்தாவில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் சிலிண்டர்கள் புக்காகும் இடத்தில், தற்போது ஒன்றரை லட்சம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில், குறிப்பாக கொல்கத்தா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் கடந்த ஐந்து-ஆறு நாட்களில் எல்பிஜி முன்பதிவுகள் 15%–20% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனால், சில பகுதிகளில் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கு எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதன் மூலம், மற்றொரு சிலிண்டருக்கான முன்பதிவு முதல் சிலிண்டர் பெற்ற 21 நாட்களுக்குப் பிறகுதான் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

அதன்படி, கொல்கத்தாவில் மற்றொரு சிலிண்டருக்கான முன்பதிவு 21 நாட்களுக்கு பிறகும், பீகார் மாநிலம் பாட்னாவில் 15 முதல் 25 நாட்களுக்கு பிறகும் மற்றொரு சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தற்சமயத்திற்கு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் ‘இரட்டை’ இடி! தங்கம் மற்றும் சிலிண்டர் விலை தடாலடி உயர்வு..!
Gas cylinder

மேலும் தற்போது எல்பிஜி பற்றாக்குறை இல்லை. வாடிக்கையாளர்கள் பீதியுடன் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று ஐஓசியின் தலைமை பொது மேலாளர் (எல்பிஜி) கே.எம். தாக்கூர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com