காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 இது குறித்து ஜம்மு காஷ்மீர் கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறியதாவது;

 காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் மற்றும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் அந்த 4 தீவிரவாதிகள் தங்கியிருந்த இடம் கண்டறியப் பட்டது.

இதையடுத்து அந்த இடத்தை போலீஸ் சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் 2 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் புல்வாமா காவல் நிலையத்தின் சிறப்பு அதிகாரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாவர். மேலும்  ட்ராச் பகுதியில் தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கும் என்கவுன்ட்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com