

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், ஸ்மார்ட்போன் தான் அனைவரது நேரத்தையும் அதிகளவில் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதற்கேற்ப அனைத்து வசதிகளும் ஸ்மார்ட்போனில் அப்டேட் செய்யப்படுவதால், இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
தற்போதைய ஸ்மாரட்போன் யுகத்தில் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கக்கூடிய அணு பேட்டரியை கண்டுபிடித்துள்ளது சீன நிறுவனம்.
ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதில் பேட்டரி திறன் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி தீர்ந்து விட்டால், உடனே அதனை சார்ஜ் செய்வது அவசியம். இந்த சார்ஜ் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொண்டு வர கடந்த சில ஆண்டுகளாக பவர் பேங்க் பயன்படுத்தப்பட்டு வருகிறது
பவர் பேங்க் மூலம் நாம் எங்கு சென்றாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்ற வசதி உருவானது. இந்நிலையில் சார்ஜரும் தேவையில்லை; பவர் பேங்க்கும் தேவையில்லை என்ற வகையில் நவீன அணு பேட்டரியை கண்டுபிடித்துள்ளது சீனாவின் Betavolt நிறுவனம்.
இந்த பேட்டரி பயன்பாட்டுக்கு வந்து விட்டால், இந்த உலகமே வேறு வகையாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த பேட்டரி கிட்டத்தட்ட 50 வருடத்திற்கு நீடித்து உழைக்கும் திறன் பெற்றது என கூறப்படுகிறது. அதாவது ஒரு முறை அணு பேட்டரியை மின்னணு சாதனங்களில் வைத்து விட்டால், அதன் பிறகு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
கடந்த மாதம் Realme P4 Power என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த போன் 10,001 mAH திறன் கொண்டது. இந்தியாவில் அறிமுகமான போன்களிலேயே இதுதான் அதிகபட்ச பேட்டரி திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட் போன் கிட்டத்தட்ட ஒன்றரை நாளுக்கு நீடித்து உழைக்கும் திறன் பெற்றது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதிலிருந்து மற்றொரு போனுக்கும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இதிலிருக்கிறது.
இந்நிலையில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே தேவையில்லை எனும் வகையில் அணு பேட்டரியை உருவாக்கியுள்ளது சீன நிறுவனம்.
சீனாவைச் சேர்ந்த Betavolt நிறுவனம், தொழில்நுட்ப உலகில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக தற்போது சிறிய வடிவிலான அணு பேட்டரியை உருவாக்கி உள்ளது. இது ஒரு நாணயத்தை விடவும் சிறிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பேட்டரியை ஒருமுறை வைத்து விட்டால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும் என்பதால், சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கதிரியக்க சிதைவு தொழில்நுட்பத்தில் அணு பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணு பேட்டரி வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்து விட்டால், இனி வரும் காலங்களில் தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் மின் தேவையும் குறைந்து விடும்.
அணு பேட்டரி அளவில் சிறியதாக இருப்பதால் இதனை கையாள்வது மிகவும் எளிது எனவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு பேட்டரி 50 வருடத்திற்கு நீடித்தால் இந்த உலகம் எப்படி மாறும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்போதே ஆச்சரியத்தில் அமைந்துள்ளனர்.
மேலும் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போகிறது என கவலைப்படும் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு, இதுவொரு வரப் பிரசாதமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது