8வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் ஃபேக்டர் 4.0 உண்மையா? சம்பள உயர்வு, அரியர்ஸ் எப்போது? முழு அலசல்!

இணையத்தில் பரவும் ஊகங்களின் உண்மை நிலவரம், அறிக்கை தாக்கல் தேதி மற்றும் நடைமுறைக்கு வரும் காலம் குறித்த நேரடி பார்வை.
8வது ஊதியக் குழு
8th Pay Commission
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன் மற்றும் படிகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைக்க மத்திய அரசால் ஊதியக் குழு அமைக்கப்படும். கடந்த 2016 ஆம் ஆண்டு 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், 2025 நவம்பர் 3-ம் தேதி 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.

இறுதி அறிக்கை எப்போது?

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், 3 பேர் கொண்ட குழு நிதிநிலைமைக்கு ஏற்ப அறிக்கையைத் தயார் செய்து வருகிறது.

8-வது ஊதியக் குழுவுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2027 மே மாதம், இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள உயர்வு எப்போது?

முந்தைய ஊதியக் குழுக்களின் வழக்கப்படி சம்பள உயர்வு 2026 ஜனவரி 1-ம் தேதியில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் 8-வது ஊதியக் குழு அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, மத்திய அரசு இதறகு ஒப்புதல் அளிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால், 2027 இறுதியில் அல்லது 2028 தொடக்கத்தில் சம்பள உயர்வு அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

சம்பள உயர்வு அமலுக்கு வரும் போது, 2026 ஜனவரி முதல் ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வரும் நாட்கள் வரையிலான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையாக சேர்த்து வழங்கப்படும்.

இதுவரை உறுதியானவை:

கடந்த ஓராண்டாக 8-வது ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கையைத் தயார் செய்து வருகிறது. பொதுமக்கள், ஊழியர் சங்கங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து MyGov தளம் மற்றும் 8-வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் 8cpc.gov.in வாயிலாக கருத்துக்கள் மற்றும் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

8-வது ஊதியக் குழுவின் மூலம் நாட்டில் உள்ள சுமார் 49 முதல் 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், 65 முதல் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.

8th Pay Commission
8th Pay Commissionimage credit-ndtvprofit.com
இதையும் படியுங்கள்:
இனி அரசு வேலை கனவு நனவாகும்! வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: குரூப் 1, 2, 4 புதிய வயது பட்டியல் இதோ!
8வது ஊதியக் குழு

இன்னும் முடிவாகாதவை:

* ஃபிட்மெண்ட் ஃபேக்டர் (Fitment Factor): மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

* குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்: 7-வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. 8-வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

* படிகள்: அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பயணப்படி மற்றும் மருத்துவப்படி ஆகியவற்றின் புதிய விகிதங்கள் அறிக்கைக்குப் பின்பு தான் தெரியவரும்.

* ஓய்வூதிய முறை: தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் புதிய விதிகள், 8-வது ஊதியக் குழுவில் எவ்வாறு இணைக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
மாத இறுதியில் நகை வாங்க செம சான்ஸ்! ஒரே நாளில் ரூ.2,480 சரிவு.! ரூ.10,000 சரிந்த வெள்ளி.!
8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழு சம்பளக் கணக்கீடு செய்திகளை நம்பலாமா?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3.83 அல்லது 4.0 என்ற அளவில் இருக்கும் என இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் யூகங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கோரிக்கை மட்டுமே. இவை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல என்பதே உண்மை. 8-வது ஊதியக் குழுவின் அறிக்கைக்கு பின்னரே சம்பளக் கணக்கீடு உறுதியாக தெரிய வரும்.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3.83 - 4.0: இது கோரிக்கையா அல்லது முடிவா?

3.83 முதல் 4.00 வரை ஃபிட்மெண்ட ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

2006-ல் 6-வதுஊதியக் குழுவின் போது ஃபிட்மெண்ட ஃபேக்டர் 1.86 ஆக இருந்தது. 2016-ல் 7வது ஊதியக் குழுவின் போது ஃபிட்மெண்ட ஃபேக்டரை 3.67 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையால், 2.57 ஆக நிர்ணயித்தது மத்திய அரசு.

8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட ஃபேக்டரை 4 ஆக உயர்த்தினால், அடிப்படை ஊதியம் ரூ.72,000 ஆக உயரும். இது மத்திய அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி விடும். ஆகையால் 8-வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 2.28 முதல் 2.86 வரை நிர்ணயிக்கவே அதிக வாய்ப்புள்ளது.