

2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 23 பெண்கள் தங்களின் வெற்றியைப் பதிவு செய்து, சட்டமன்றத்திற்குள் கம்பீரமாக நடைபோட உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108, தி.மு.க. கூட்டணி 73, அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 1952 முதல் 1967- ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதன்பின் தற்போது வரை அதாவது கிட்டதட்ட 59 ஆண்டுகளாக திமுக. அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்தன. அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்பு தரவில்லை.
ஆனால் முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
இந்த நிலையில், 17-வது சட்டசபைக்குள் 22 பெண் உறுப்பினர்கள் நுழைய இருக்கின்றனர். அதில் த.வெ.க.வில் இருந்து மட்டும் 13 பெண்கள் வெற்றி வாகை சூடி, சட்டமன்றத்தில் முதல்முறையாகக் கால் பதிக்கவுள்ளனர். இது அக்கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.
அதனை தொடர்ந்து பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் இருந்து 6, தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் இடம்பெறுகின்றனர். ஆனால் ஆளுங்கட்சியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்ட 19 பெண் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை சட்டசபையில் பெண்களின் பங்களிப்பு, கடந்த காலங்களை விட, குறிப்பாகப் புதிய கட்சி மூலம் கணிசமாக அதிகரித்துள்ளது. அவர்களின் விவரம் வருமாறு:-
தவெக:
1. எம்.ஆர்.பல்லவி (த.வெ.க., திரு.வி.க.நகர்),
2. காமாட்சி (த.வெ.க., பல்லாவரம்),
3. சிந்து (த.வெ.க., குடியாத்தம்),
4. விஜயலட்சுமி (த.வெ.க., குமாரபாளையம்).
5. தமிழ்செல்வி (த.வெ.க., பவானிசாகர்),
6. சத்தியபாமா (த.வெ.க., திருப்பூர் வடக்கு),
7. கமலி (த.வெ.க., அவினாசி),
8. கனிமொழி சந்தோஷ் (த.வெ.க., கவுண்டம்பாளையம்),
9. சத்யா (த.வெ.க., கிருஷ்ணராயபுரம்),
10. குழந்தை ராணி நாச்சியார் (த.வெ.க., சிவகங்கை),
11. கீர்த்தனா (த.வெ.க., சிவகாசி),
12. ஜெகதீஸ்வரி (த.வெ.க., ராஜபாளையம்),
13. தாஹிரா (த.வெ.க., ராணிப்பேட்டை )
அதிமுக :
14. மரகதம் குமரவேல் (அ.தி.மு.க., மதுராந்தகம்),
15. எல்.ஜெயசுதா (அ.தி.மு.க., ஆரணி),
16. உஷாராணி (அ.தி.மு.க., ஏற்காடு),
17. மரகதம் வெற்றிவேல் (அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி),
18. லீமாரோஸ் (அ.தி.மு.க., லால்குடி),
19. சத்தியபாமா (அ.தி.மு.க., தாராபுரம்),
20. பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க., விருத்தாசலம்),
21. சவுமியா அன்புமணி (பா.ம.க., தர்மபுரி),
22. லதா (மா.கம்யூ, கீழ்வேளூர்),
23. தாரகை கத்பர்ட் (காங்கிரஸ், குளச்சல்).
தமிழக சட்டசபையை 23 சிங்கப்பெண்கள் அலங்கரித்துள்ள நிலையில், புதியதாக அமைவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரே ஒரு பெண் உறுப்பினரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அரசியலில் முன்னேற அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.