பெரும்பாலானவர்களின் காலைப் பொழுது ஆவின் பாலுடன் தான் துவங்கும். வீட்டில் விசேஷம் என்றால் ஆவின் நெய் ஸ்வீட் வடிவத்திலோ நேரிடையாகவோ நிச்சயமாக விருந்தில் இடம் பெறும். வெளியூர்களுக்கு செல்லும் போது வழியில் இருக்கும் ஆவின் பூத்து களில் பால் அருந்துவது பலருக்கும் விருப்பமான பொழுதுபோக்கு. அந்த அளவுக்கு ஆவின் தயாரிப்புகள் நம் வாழ்வின் அங்கமாக உள்ளது என்றால் மிகையாகாது.
ஒரு காலத்தில் வீட்டுக்கு ஒரு மாடு வளர்த்து தேவையான பாலை பெற்ற நிலையில் காலப்போக்கில் விஞ்ஞான மாற்றம் கண்டு மாடுகளின் பாலை சேமித்து தேவைப்படுவோருக்கு வழங்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த பால் வளர்ச்சித் துறை (Dairy Development Department) 1958-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கியது . பின்னர், 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பால் வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Dairy Development Corporation) உருவாக்கப்பட்டு, பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டது.
1981 பிப்ரவரி 1 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (TCMPF) உருவாக்கப்பட்டது. இதன் வர்த்தகப் பெயராக "ஆவின்" (Aavin) அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பால் மற்றும் பால் பொருட்கள் "ஆவின்" என்ற பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. "ஆ" என்றால் பசு "ஆவின் பால்" என்பது "பசுவின் பால்" என்ற பொருளை குறிக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாக குறிப்புகள் கூறுகிறது.

ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
குறிப்பாக ஆவின் நிறுவனம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்தல். அப்படி பெறப்படும் பாலை தரப் பரிசோதனை செய்து பதப்படுத்துதல். பால் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொண்டு
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆவின் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை நகரில் அமைந்துள்ளது எனினும் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் சேகரிக்கப்பட்டு, ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர்கள் மூலம் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது.
ஆவின் நிறுவனம் பால் விநியோகம் மட்டுமின்றி காலத்துக்கு ஏற்ப புதிய மதிப்புக் கூட்டப்பட்ட (Value-added) பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
பால் வகைகளில் டோன்டு பால், ஸ்டாண்டர்டைஸ்டு பால், முழுக் கொழுப்பு (Full Cream) பால், டபுள் டோன்டு பால், UHT பால் வகைகளும் தயிர் மற்றும் புளிக்க வைத்த பானங்களாக தயிர், ப்ரோபயாட்டிக் தயிர், மோர், லஸ்ஸி ஆகியவைகளும் பால் கொழுப்பு பொருட்களான நெய், வெண்ணெய் மற்றும் குழந்தைகள் விரும்பும் பால் உணவுப் பொருட்களாக பன்னீர், சீஸ், கோவா (Khoa), பால் பவுடர். கப், கோன், ஸ்டிக் மற்றும் பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம் வகைகள் , சுவைபடுத்தப்பட்ட பானங்களாக பாதாம் பால், சாக்லேட் பால், ஸ்ட்ராபெரி, பிஸ்தா உள்ளிட்ட ஃப்ளேவர்டு மில்க், மில்க்ஷேக் இவைகளுடன் ஸ்பெஷல் இனிப்புகள் பால்கோவா, பேடா, குலாப் ஜாமூன், மைசூர்பா, சாக்லேட் போன்றவைகளும் ஆவின் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பண்டிகை காலங்களில், குறிப்பாக தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல் போன்ற விழாக்களை முன்னிட்டு, ஆவின் நெய் இனிப்பு கோவா ஆகியவற்றில் செய்யப்படும் சிறப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்புகளையும் ஆவின் மூலம் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் "ஆவின் மில்க் ரஸ்க்" (Aavin Milk Rusk)" தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ஆவின் நிறுவனம். இது ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் வரிசையில் இணைக்கப்பட்டுள்ள புதிய மதிப்புக் கூட்டப்பட்டதயாரிப்பாகும்.
ஆவின் பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட, மொறுமொறுப்பான 100 கிராம் எடையுள்ள ஆவின் மில்க் ரஸ்க் பாக்கெட்டின் விலை ரூபாய் 20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 60 கிராம் கொண்ட ஆவின் மில்க் ரஸ்க் ரூபாய் 12க்கு விற்பனை செய்யப்படும்.
பால் ,நெய் ,தயிர் ,பால்கோவா ,மைசூர்பா, மில்க் பிஸ்கட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் ஆவின் ரஸ்க் விற்பனையிலும் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய தயாரிப்பின் மூலம், பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையையும் விரிவுபடுத்த ஆவின் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரஸ்க் உடன் பால் குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால் ஆவினின் இந்த புதிய அறிமுகம் வரவேற்கப்படும் ஸ்நாக்ஸாக இருக்கும்.