

மைக்ரோசாப்ட் (Microsoft)நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சத்ய நாதெல்லா, மனிதகுலத்திற்குப் பயனற்ற மற்றும் மனிதக் கட்டுப்பாட்டில் இல்லாத அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக ஏஐ ஆய்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் ஏஐ மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து வருகிறது என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா மனிதகுலத்திற்கு உதவாத, மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை.
Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும். AI துறையை சீரமைக்க அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை வரவேற்பதாக கூறியுள்ளார்.
நாம் உருவாக்கும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Superintelligence) எனப்படும் அதிஉயர் செயற்கை நுண்ணறிவு எப்போதும் மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்றும், அது மனிதகுலத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு சில நிறுவனங்களின் கைகளில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது என்றும், கல்வித்துறைகள் மற்றும் நாடுகள் பலவற்றின் பங்களிப்பு இதில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு உதவவில்லை என்றாலோ அல்லது அதை மனிதக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாவிட்டாலோ, அதைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நாதெல்லா கூறினார்.
சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு(AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும்..
மனதில் கற்பனை செய்து பார்ப்பதை கூட திரையில் வீடியோவாக கொண்டு வர முடியும். அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது. Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று. அதை மறுக்க முடியாது என்றாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. AI மனித குலத்திற்கு எதிரானது. AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் சொல்கிறார்கள். இந்த சூழலில் தான் சத்ய நாதெல்லா இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் வணிக நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தங்களின் அன்றாட பணிகளில் இணைத்துக் கொள்ளும்போது, நிறுவனங்களின் தனித்துவமான மற்றும் ரகசியமான நிபுணத்துவ தகவல்கள் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளர்.
Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை மக்களின் கருத்துக்காக வெளியிட உள்ளோம். அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்தை ஏற்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி வெளிப்படையாகப் பதிலளித்திருந்தார். மேலும், ஏஐ துறையின் வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலமே ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மனிதகுலத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில், AI பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நிதானமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் எனப் பல தொழில்நுட்ப தலைவர்களும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.