அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா? தேர்வு இல்லை...உடனே விண்ணப்பிங்க..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Programme Officer, Information Officer, IT/GIS Officer மற்றும் Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

அண்ணா பல்கலைக்கழகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. தமிழக அரசு வேலை தேடுவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. திட்ட அலுவலர், (Programme Officer), Information Officer (தகவல் அலுவலர்), தகவல் தொழில்நுட்பம்/புவியியல் தகவல் அமைப்பு (IT/GIS Officer) மற்றும் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) உள்ளிட்ட பல பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களையும் இங்கே காணலாம்.

B.E/B.Tech, B.Sc, M.E/M.Tech, M.Sc, M.S.W உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப ₹16,800 முதல் ₹52,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பாகும். சென்னை, தமிழ்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்

வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 4

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.09.2026

1. பதவி: திட்ட அலுவலர், (Programme Officer)

சம்பளம்: மாதம் Rs.52,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: கடலோர மேலாண்மை அல்லது சுற்றுச்சூழல் பொறியியலில் M.E/M.Tech படித்தவர்கள் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.

Desirable: B.E. (சிவில் இன்ஜினியரிங்) + Ph.D (கடலோர/கடல்சார் பொறியியல்/நீர் வளங்கள்/சுற்றுச்சூழல் பொறியியல்).

2. பதவி: Information Officer (தகவல் அலுவலர்)

சம்பளம்: மாதம் Rs.44,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: கடலோர மேலாண்மை / சுற்றுச்சூழல் பொறியியல் / நீரியல் மற்றும் நீர் வளங்கள் ஆகிய துறைகளில் M.E/M.Tech படித்தவர்கள் மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம்.

Desirable: Experience with EIACP Programme

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Job Opportunities
Job Opportunities

3. பதவி: தகவல் தொழில்நுட்பம்/புவியியல் தகவல் அமைப்பு (IT/GIS Officer)

சம்பளம்: மாதம் Rs.35,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: கணினி அறிவியல் / சிவில் பொறியியல் / புவி-தகவலியல் (Geoinformatics) பிரிவில் B.E/B.Tech பட்டம் மற்றும் GIS மென்பொருளைக் கையாள்வதில் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.

Desirable: Experience with EIACP Programme

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பதவி: தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் B.E./B.Tech. அல்லது B.Sc., அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து M.Sc. அல்லது M.S.W.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இதையும் படியுங்கள்:
ரூ.85,000 சம்பளம்.. பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 காலிப்பணிடங்கள்..விண்ணப்பிப்பது எப்படி?
அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்ட படிவத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பட்டச் சான்றிதழ் அல்லது தற்காலிகப் பட்டச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, வரும் 25-ம்தேதி (செப்டம்பர் 25) மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்; அல்லது அதன் மின்னணுப் பிரதியை (soft copy) dirocean@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அஞ்சல் முகவரி:

இயக்குநர்,

கடல்சார் மேலாண்மை நிறுவனம் (Institute for Ocean Management),

அண்ணா பல்கலைக்கழகம்,

சென்னை – 600 025.

இதையும் படியுங்கள்:
தேர்வு கிடையாது.. தமிழக போக்குரத்து துறையில் 1518 பணியிடங்கள்...விண்ணப்பிப்பது எப்படி?
அண்ணா பல்கலைக்கழகம்

விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

logo
Kalki Online
kalkionline.com