

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda -BOB) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் உள்ளூர் வங்கி அதிகாரி/Local Bank Officer (LBO) பதவிக்கு நாடு முழுவதும் 2,482 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு மட்டும் 132 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி பணியில் சேர விரும்பும் தகுதியானவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு மையங்கள், முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு : மத்திய அரசு வேலை 2026
நிறுவனம் : Bank of Baroda (BOB)
பதவி : உள்ளூர் வங்கி அதிகாரி/Local Bank Officer (LBO)
மொத்த காலியிடங்கள் : 2,482
தமிழ்நாடு காலியிடங்கள் : 132
பணியிடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை : ஆன்லைன்
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Graduation / Any Degree முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் : இந்த வேலைவாய்ப்பில் பட்டப்படிப்பு மட்டும் இருந்தால் போதாது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகு குறைந்தது ஒரு ஆண்டு Officer-level (Scheduled Commercial Bank-ல் Officer) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் post-qualification ஆக இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பிக்கும் முன் உங்களுடைய கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.
மொழித் திறன்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி (தமிழ்நாட்டில் விண்ணப்பித்தால் தமிழ்) நன்றாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி தகுதியான பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD – UR பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD – OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள், PwBD – SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரையிலும் மற்றும் Ex-Servicemen என அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் : ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை, அதுமட்டுமின்றி அடிப்படை ஊதியத்துடன் வங்கி விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய பல்வேறு allowances மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : வரும் செப்டம்பர் 7-ம்தேதி 2026
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://bankofbaroda.bank.in/
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : SC / ST / PwBD / ESM / DESM / பெண்களுக்கு ரூ.175-ம், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.850-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Objective Test)
உள்ளூர் மொழித் திறன் தேர்வு (Local Language Proficiency Test)
சைக்கோமெட்ரிக் தேர்வு / குழு விவாதம் மற்றும் நேர்காணல் (Interview)
எனவே, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் அடுத்தடுத்த தேர்வு கட்டங்களுக்கு தயாராக இருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் https://bankofbaroda.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification PDF) ஒருமுறை தரவிறக்கம் செய்து தெளிவாகப் படித்துப் பார்ப்பது நல்லது.