

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கிடைக்கும் வண்ணம் அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் (Annapoorani Super Six) அடுத்த ஆண்டு (2027) பொங்கல் முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் என்பது ஆண்டுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டம் அல்ல; இது ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை (LPG Cylinders) தகுதியான குடும்பங்களுக்கு வழங்கும் திட்டமாகும்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
மேலும் எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனக் குறிப்பட்ட அவர் இத்திட்டத்தினால் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவர் என்று கூறினார்.
நிதி நெருக்கடியான சூழலில் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தவெக வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில், முதல் முதற்கட்டமாக தகுதியுள்ள குடும்ப பெண்களுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சிலிண்டருக்கான தொகை முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாது. இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, பயனாளிகள் முதலில் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
பின்னர் 3 இலவச எல்பிஜி சிலிண்டர்களுக்கான முழுத் தொகையும் (Reimbursement) நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் (DBT) நேரடியாக வரவு வைக்கப்படும். (சிலிண்டர் விலையின் அடிப்படையில் இது ஆண்டுக்குச் சுமார் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையிலான சேமிப்பாக அமையலாம்).
பயனாளிகள் தகுதி:
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் (1,30,16,104 குடும்பங்கள்) இதன் மூலம் பயனடைவர்.
இத்திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ. 4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கிய செல்லுபடியாகும் குடும்ப அட்டை வைத்திருப்பதும், குடும்பத் தலைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செயலில் உள்ள கேஸ் இணைப்பு இருப்பதும் அவசியம்.
இந்த திட்டத்துக்காக பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் கேஸ் இணைப்பு தொடர்பான விவரங்கள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதாரை இணைக்கும் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டியது அவசியம்.
ரேஷன் கார்டில் குடும்பத்தின் ஆண்டு வருமான விவரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ், ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தாலும், முதன்மையான இணைப்புக்கு மட்டுமே ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான பலன் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியாக இந்தப் பலனைப் பெற முடியாது.
அதாவது, ஒரு நுகர்வோர் தங்களின் பெயரில் இரண்டு அல்லது மூன்று சிலிண்டர் (Two or three Bottle Cylinder - DBC) இணைப்புகளைப் பயன்படுத்தினாலும், திட்ட விதிகளின்படி ஒரு சிலிண்டருக்கு மட்டுமே மானியத் தொகை முழுமையாகக் கிடைக்கும்.
மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்ட பிறகே, இத்திட்டத்தின் பயனாளித் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்துத் தெளிவாகத் தெரியவரும்.